“நான் இதை மறக்கவே மாட்டேன் கார்த்தி சார்” – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கவின் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

டாடா படத்தை புகழ்ந்த நடிகர் கார்த்தி  - Actor Karthi Praises Kavin Dada movie | Galatta

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் சின்னத்திரை நடிகருமான கவின் நடிப்பில் திரையரங்குகளுக்கு கடந்த பிப்ரவரி 10 ம் தேதி வெளியாகிய திரைப்படம் ‘டாடா. இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கத்தில் இப்படத்தில் கவின் உடன் இணைந்து நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் டாடா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான ‘லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியது.

அதன்படி அவர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் அளவு பாடல்களும் டிரைலரும் இருந்தது. திரைப்படம் வெளியாகி ஜனரஞ்சகமான வெற்றியை பெற்று ரசிகர்களின் ஆதரவை பெற்று இன்று வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது.ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் வெளியான டாடா படத்திற்கு ரசிகர்கள் திரைபிரபலங்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி டாடா படம் பார்த்து விட்டு, “அருமையான திரைப்படம் இது.. எழுத்தும் ஆக்கமும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கவின் அழகாகவும் நேர்த்தியாகவும் பங்களிப்பை கொடுத்திருக்கிறீர்கள். படக்குழுவிற்கு எனது நன்றிகள்..உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Finally watched #Dada. What a great film! So happy to see such good writing and film making. Great performances by everyone. @Kavin_m_0431 - it was such a beautiful and complete performance. Congratulations team. Very proud of you guys. @ganeshkbabu @aparnaDasss @ambethkumarmla

— Karthi (@Karthi_Offl) March 1, 2023

அதனை தொடர்ந்து நடிகர் கவின் அந்த பதிவை பகிர்ந்து அதனுடன், அது சில மணி நேர அழைப்பு தான். நீங்கள் நிறைய பேசுனீர்கள், அதில் ஒன்றை மட்டும் நான் என்றுமே மறக்க மாட்டேன் “நான் இந்த படத்தை மறக்க மாட்டேன்”. நானும் ஒன்றை உங்களிடம் சொல்ல வேண்டும் இதை என்னால் மறக்கவே முடியாது. நன்றி கார்த்தி சார் வாழ்க வளமுடன் வந்தியத்தேவா ” என்று பதிவிட்டிருந்தார்.

It was a five minute call. Amongst the everything you told me, I can only remember this one thing forever - “I will remember this film”
And I want to let you know that I will never forget this, @Karthi_Offl sir ♥️🙏🏼#VaazhgaValamudanVandhiyatheva 🔥 https://t.co/ifyhLUtswS pic.twitter.com/arLCZjs9Br

— Kavin (@Kavin_m_0431) March 1, 2023

இதையடுத்து ரசிகர்கள் இருவரின் பதிவையும் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக கவின் அவர்களை நடிகர் தனுஷ் தொடர்பு கொண்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து டாடா படத்திற்கு சரியான வரவேற்பு கிடைத்து வருவதால் நிச்சயம் கவின் தமிழ் சினிமாவில் மென்மேலும் உயர அதிகளவு வாய்ப்புள்ளது.

பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா.. ஹீரோவாக முன்னணி நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா.. ஹீரோவாக முன்னணி நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் Glimpse இதோ..

50வது நாளில் அஜித் குமாரின் ‘துணிவு’.. உற்சாகத்தில் அதகளப்படுத்தும் ரசிகர்கள்.. - படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

50வது நாளில் அஜித் குமாரின் ‘துணிவு’.. உற்சாகத்தில் அதகளப்படுத்தும் ரசிகர்கள்.. - படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..

மீண்டும் லைகாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ‘தலைவர் 170’ படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர்.. - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

மீண்டும் லைகாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ‘தலைவர் 170’ படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர்.. - வைரலாகும் அறிவிப்பு இதோ..