வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் குறித்து அருண் விஜய்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..

மாவீரன் திரைப்படம் குறித்து அருண் விஜய் பதிவு வைரல் – Arun Vijay about sivakarthikeyan maaveeran movie | Galatta

கடந்த ஜூலை 14 ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாறுபட்ட கதைகளத்தில் பெண்டசி திரைப்படமாக உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் படத்தில் இயக்குனர் மிஷ்கின், சுனில், சரிதா, மோனிஷா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒலிப்பதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் பரத் சங்கர் படத்திற்கு இசையமைதள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்து தற்போது மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியான மாவீரன் திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. திரை பிரபலங்கள், ரசிகர்கள் என மாவீரன் திரைப்படத்தை பாராட்டி தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் அருண் விஜய் அவர்கள் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் குறித்து பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மாவீரன் படம் இப்போது தான் பார்த்தேன்.. முழுக்க முழுக்க நான் ரசித்து பார்த்தேன். சிவகார்த்திகேயன் சகோதரா நீங்கள் அந்த கதாபாத்திரத்தை எளிமையாக கச்சிதமாக செய்திருக்கிறீர்கள்.. யோகி பாபு நடிப்பு அருமை. விஜய் சேதுபதி சகோதரா உங்கள் பின்னணி குரல் அருமை.. இயக்குனர் மடோன் அஷ்வின் மற்றும் படக்குழுவினரின் அட்டகாசமான உழைப்பிற்கு எனது பாராட்டுகள்..” என்று குறிப்பிட்டுள்ளார் இதையடுத்து நடிகர் அருண் விஜய் அவர்களின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அருண் விஜய்  நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் ‘பார்டர்’. ‘அக்னி சிறகுகள்’. அதை தொடர்ந்து தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் 1 – அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரிப்பில் அதிரடி ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் வித்யாசமணா கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Just watched #MAAVEERAN.. Thoroughly enjoyed it.❤️ @Siva_Kartikeyan brother you played the role at ease and excelled in ur performance..👌🏽👏🏽 Loved @iYogiBabu and @VijaySethuOffl brother's voice-over. Kudos to dir @madonneashwin and the entire cast and crew for the excellent…

— ArunVijay (@arunvijayno1) July 18, 2023

 

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..
சினிமா

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..

தலைவா முதல் மாஸ்டர் வரை.. உலக புகழ்பெற்ற விம்பிள்டனை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
சினிமா

தலைவா முதல் மாஸ்டர் வரை.. உலக புகழ்பெற்ற விம்பிள்டனை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

“மனதில் நிலைத்து நிற்கும் தருணம் இது..” பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்.. - இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

“மனதில் நிலைத்து நிற்கும் தருணம் இது..” பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்.. - இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..