“8 மாசம் வேலையில்ல.. சாப்பிட காசு இல்ல..” மோசமான அனுபவம் குறித்து பிரபல நடிகர் அப்பாஸ்.. – Exclusive Interview உள்ளே..

திரையுலகில் மோசமான அனுபவம் குறித்து நடிகர் அப்பாஸ் பகிர்ந்த தகவல் - Actor Abbas about his struggling time in film industry | Galatta

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக 90களில் வலம் வந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகன் நடிகர் அப்பாஸ், 1997 ல் வெளியான ‘காதல் தேசம்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகாமான இவர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முக்கிய இளம் நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்து முக்கிய நடிகராகவும் திரையுலகில் வளர்ந்தார். ஒரு காலக் கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்த நடிகர் அப்பாஸ், அதன்பின் பல காரணங்களினால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தன் பின் தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.  தற்போது முழு வீச்சுடன் திரைத்துறையில் இல்லையென்றாலும் 90 களின் காலக் கட்டத்தில் முக்கிய ஹீரோக்களை பட்டியியாலிட்டால் நடிகர் அப்பாஸ் அவர்களின் பெயர் முக்கிய இடத்தில் இருக்கும். மேலும் இன்றும் ரசிகர்கள் நடிகர் அப்பாஸ் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.  

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைபயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவரது தோல்வி படங்கள் குறித்து பேசுகையில்,

“நான் நடிச்ச 2,3 படம் தோல்வியடைஞ்சுது. 8 மாசம் வேலையில்லை.. வீட்டுக்கு வாடகை தரணும். சாப்பட காசு வேண்டும். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கனும். சிகரெட்டுக்கு காசு தேவை..   எனக்குள்ள ஈகோ இருந்தது. அதை ஓரமா எடுத்து வெச்சேன்.  நான் ஆர்பி சௌத்ரி சார் , கலைப்புலி தானு சாரிடம் நேரில் போய் 8‌ மாசம் வேலையில்லை.. காசு இல்லை.. அதனால் வேலை வேண்டும் னு கேட்டேன்.

அப்போதான் பூவேலி னு ஒரு படம் வாய்ப்பு வந்தது. கார்த்திக் சார் தான் ஹீரோ. அந்த படப்பிடிப்புக்கு போகும்போது எனக்கு ஒருமாதிரி இருக்கும். எல்லோரும் பார்ப்பாங்க.. முந்தநாள் ஹீரோ இப்போ எப்படி இருக்காருனு நினைப்பாங்களோனு நினைச்சேன்.அது என் வாழ்க்கையில ரொம்ப மோசமான தருணம் அது.  பூவேலி படம் ஹிட் ஆனதும் படையப்பா படம் வந்தது. அதன் பின் எனக்கு நிறைய பட வாய்ப்பு வந்தது.  ஆனந்தம், பம்பல் கே சம்பந்தம்.. அப்போதான் புரிஞ்சுது. வாழ்க்கையில ஏற்ற இறக்கங்கள் வரும். கீழ வரும் போது நாம் நம்மள புரிஞ்சிக்கனும் ஏத்துக்கனும் னு.. நான் என் ஈகோவ முறியடிச்சு முன்னேற முயன்றேன்.." என்றார் நடிகர் அப்பாஸ்

மேலும் நடிகர் அப்பாஸ் அவர்கள் அவரது திரைப்பயணம் குறித்தும் மற்றும் அவரது வாழ்கை குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் அடங்கிய முழு வீடியோ இதோ..

 

 

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..
சினிமா

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..

தலைவா முதல் மாஸ்டர் வரை.. உலக புகழ்பெற்ற விம்பிள்டனை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
சினிமா

தலைவா முதல் மாஸ்டர் வரை.. உலக புகழ்பெற்ற விம்பிள்டனை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

“மனதில் நிலைத்து நிற்கும் தருணம் இது..” பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்.. - இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

“மனதில் நிலைத்து நிற்கும் தருணம் இது..” பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்.. - இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..