"நான் ஏலியன் வேடத்தில் நடிக்கவில்லை!"- தன் அடுத்த அசத்தலான தமிழ் பட ஸ்பெஷல் தகவல் கொடுத்த டாப்ஸி! விவரம் இதோ

தன் அடுத்த ஏலியன் தமிழ் பட ஸ்பெஷல் தகவல் கொடுத்த டாப்ஸி,taapsee shared important statement on her next tamil movie alien | Galatta

நடிகை டாப்ஸி அடுத்து தமிழில் நடிக்கும் புதிய ஏலியன் திரைப்படம் குறித்த முக்கிய தகவல்களை ரசிகர்களோடு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக தொடர்ச்சியாக வெவ்வேறு விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் நடிகை டாப்ஸி. கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை டாப்ஸி, 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்திலு தனுஷ் நடித்து வெளிவந்து தேசிய விருதுகளை குவித்ய வென்ற ஆடுகளம் திரைப்படத்தில் ஐரின் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கினார். தொடர்ந்து ஜீவாவின் வந்தான் வென்றான், அஜித் குமாரின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2, கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதையின் நாயகியாக நடித்த டாப்ஸி கடைசியாக தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆனது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் லூப் லபேட்டா, மிஷன் இம்பாசிபிள், சபாஷ் மித்து (கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் படம்), தோபாரா, தட்கா மற்றும் பிளர் ஆகிய 6 திரைப்படங்கள் டாப்ஸி நடிப்பில் வெளிவந்தன. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் ஹிந்தியில் வோ லட்கி ஹய் கஹான், ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா உள்ளிட்ட படங்களில் நடிக்கும் டாப்ஸி இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கும் டன்கி படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ASK ME ANYTHING-ல் ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை டாப்ஸி பதில் அளித்து வந்தார்.அந்த வகையில் ரசிகர் ஒருவர், "உங்களது அடுத்த தமிழ் படம்?" எனக் கேட்ட போது தனது நடிப்பில் அடுத்த ஏலியன் படமாக தமிழில் உருவாகும் புதிய படம் குறித்து நடிகை டாப்ஸி பதில் அளித்தார். 

அதில், “எனது அடுத்த தமிழ் திரைப்படம் ஏலியன்!. தற்சமயம் அதற்கான படப்பிடிப்பில் தான் இருக்கிறேன். இதற்கு மேல் இந்த திரைப்படம் குறித்து எதுவும் இப்போது நான் சொல்ல முடியாது. ஆனால் இது ஒரு HIGH - CONCEPT படமாக இருக்கும் என்பது மட்டும் என்னால் சொல்ல முடியும். யாரெல்லாம் கேம் ஓவர் படத்தை ரசித்தீர்களோ அவர்களெல்லாம் இந்த படத்தையும் நிச்சயமாக பாராட்டுவார்கள். தெளிவுபடுத்துவதற்காக ஒன்றை சொல்கிறேன் இந்த படத்தில் நான் ஏலியன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. நீங்கள் அனைவரும் இதை பார்ப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டு பதில் அளித்து இருக்கிறார். K-13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமாக டாப்ஸி நடிக்கும் ஏலியன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது. தனது அடுத்த தமிழ் படம் குறித்து நடிகை டாப்ஸி கொடுத்த ஸ்பெஷல் அப்டேட் இதோ…
producer emotional statement on sivakarthikeyan in maaveeran movie success

துப்பறிவாளனாக களமிறங்கிய விஜய் ஆண்டனியின் த்ரில்லர் ட்ரீட்டாக வரும் கொலை... கவனத்தை ஈர்க்கும் புதிய ட்ரெய்லர் இதோ!
சினிமா

துப்பறிவாளனாக களமிறங்கிய விஜய் ஆண்டனியின் த்ரில்லர் ட்ரீட்டாக வரும் கொலை... கவனத்தை ஈர்க்கும் புதிய ட்ரெய்லர் இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றி... 4 நாள் வசூல் இத்தனை கோடியா? அசத்தலான BOX-OFFICE விவரம் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றி... 4 நாள் வசூல் இத்தனை கோடியா? அசத்தலான BOX-OFFICE விவரம் இதோ!

சினிமா

"நான் இன்னும் கர்ப்பமாகவில்லை!"- திருமணம் குறித்த ரசிகரின் கேள்விக்கு டாப்ஸியின் நகைச்சுவையான பதில்! விவரம் உள்ளே