“மனதில் நிலைத்து நிற்கும் தருணம் இது..” பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்.. - இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

பிரதமர் மோடி குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்த பதிவு வைரல் -  Actor Madhavan about PM modi viral post here | Galatta

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் மாதவன். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து பல ஆண்டுகளாக இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார் மாதவன். நடிகராக புகழ் பெற்ற மாதவன் கடந்த ஆண்டு இயக்குனர் அவதாரம் எடுத்து அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்கையை ‘ராக்கெட்ரி’ என்ற பெயரில் இயக்கி தயாரித்து நடித்தார். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவான இப்படம் இந்தியா முழுவதும் பான் இந்திய அளவில் வெளியானது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் மாதவன் நடிப்பில் இந்தியில் ‘தொக்கா ரவுண்டு டி கார்னர்’ என்ற திரைப்படம் வெளியானது. தற்போது நடிகர் மாதவன்  தமிழில் ‘திருச்சிற்றம்பலம்’ இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் புதிய படத்திலும் அதை தொடர்ந்து டெஸ்ட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து மீண்டும் இயக்குனராக ‘ஜிடி நாயுடு’ அவர்களின் வாழ்வியலை பயோ பிக்காக இயக்கி நடிக்கவுள்ளார் நடிகர் மாதவன்.

இந்நிலையில் பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ம் தேதி ‛பாஸ்டில் டே’ என்ற பெயரில் தேசிய தினம் கொண்டாடப்படும். இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரவு விருந்து அளித்தார். இதில் நடிகர் மாதவன் பங்கேற்ற நிலையில் அதுதொடர்பான போட்டோவை தனது இன்ச்டாகிராமில் மாதவன்  பதிவிட்டுள்ளார்.

‛‛இந்தோ-பிரெஞ்சு உறவுக்காகவும், இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும்  என்ற அர்ப்பணிப்பை ஜூலை 14ல் நடந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் தெளிவாக காண முடிந்தது. நான் முழுவதும் அங்கு இருந்தேன். மேலும் பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் லூவ்ரேில் வழங்கிய இரவு விருந்தில் பங்கேற்றேன்.

இந்த விருந்தில் பரஸ்பர மரியாதை, நேர்மறையான பார்வை இருந்தது. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆர்வமாக எங்களுக்காக ஒரு செல்பி எடுத்தார். அப்போது மான்புமிகு பிரதமர் மோடி கருணையுடனும் இனிமையாகவும் எழுந்து நின்றார். இருவரின் இந்த செயல் அவர்களின் தனித்தன்மை உணர்த்துகிறது.

என் மனதில் நிலைத்து நிற்கும் தருணமாக அது மாறியது. இருவரது கருணை, பணிவு குறித்து எனக்கு சொல்லி கொடுத்துள்ளனர். இருவருக்கும் நன்றி.. இரு நாடுகளும் ஒன்றாக வளரட்டும்.. “ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நடிகர் மாதவன் அவர்களின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by R. Madhavan (@actormaddy)

“ஒருவர் படித்தால் அந்த தலைமுறையே நன்றாக இருக்கும்” கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகர் கார்த்தி – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“ஒருவர் படித்தால் அந்த தலைமுறையே நன்றாக இருக்கும்” கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகர் கார்த்தி – முழு வீடியோ உள்ளே..

“கல்வி மூலமா வாழ்கையை படிக்கனும்..” நெகிழ்சியான தருணங்களுடன் நடிகர் சூர்யா கொடுத்த அறிவுரை..
சினிமா

“கல்வி மூலமா வாழ்கையை படிக்கனும்..” நெகிழ்சியான தருணங்களுடன் நடிகர் சூர்யா கொடுத்த அறிவுரை..

‘மாமன்னன்’ வெற்றியை தொடர்ந்து தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முக்கிய திரைப்படம்.. அட்டகாசமான டைட்டிலை வெளியிட்ட படக்குழு..
சினிமா

‘மாமன்னன்’ வெற்றியை தொடர்ந்து தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முக்கிய திரைப்படம்.. அட்டகாசமான டைட்டிலை வெளியிட்ட படக்குழு..