இணையத்தை தெறிக்கவிடும் நடிகர் ஆதியின் செயல் !
By Sakthi Priyan | Galatta | July 25, 2020 19:50 PM IST

மிருகம் படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதைத்தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான், மரகதநாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் தற்போது கிளாப் என்ற படத்தில் நடித்துள்ளார்.
Let's the Bridge என்ற அமைப்பின் மூலம் உதவி இயக்குனர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கி உதவினார் ஆதி. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடிகர் ஆதி தனது அப்பாவிற்கு வீட்டிலேயே முடிதிருத்தும் மற்றும் ஷேவிங் செய்து வெளியிட்ட வீடியோ வைரலானது. அதில் ஷேவிங் செய்த ஆதிக்கு அவரது தந்தை பணம் தருகிறார். அது மிகவும் குறைவான தொகை என்று கூறி அவர் பர்ஸில் இருந்து பணம் எடுக்கிறார். இந்த வீடியோவை போலவே புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், சாலையோரத்தில் இருக்கும் பெரியவர் ஒருவருடன் சண்டை போடுவது போல் தெரிகிறது. ஆரம்பத்தில் குழப்பமடைந்த ரசிகர்கள், முழு வீடியோவை பார்த்ததும் தெளிவடைந்தனர். மேலும் இதுகுறித்து தனது பதிவில், பெரும்பாலும் நான் வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த மனிதரை பார்ப்பேன்.
இன்று நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். காசு பணம் தேவையில்லை தலைவா உன் அன்புக்கு நான் அடிமை என்று குறிப்பிட்டுள்ளார். ஆதியின் இச்செயலை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
I often see this man on my way back home. Today we said HI!
"Kaasu panam thevai illa thailaiva...Un anbu ku naan adimai!!"
P.S: LOVE above allll! pic.twitter.com/pFIxA3QmyP— Aadhi's (@AadhiOfficial) July 24, 2020
Vishal & his father affected by Corona & recover after Ayurvedhic treatment?
25/07/2020 07:40 PM
Exclusive: Producer opens up about Vijay Sethupathi-Vijay-Anushka film
25/07/2020 04:45 PM
Important announcement on Sathyabama's LEGEND 2020 National Short-film festival
25/07/2020 04:12 PM
Comali actress' latest belly dance video goes viral
25/07/2020 03:30 PM