தளபதி விஜயின் துப்பாக்கி படம் பற்றி இதுவரை வெளிவராத ரகசியங்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

துப்பாக்கி படம் பற்றி இதுவரை வெளிவராத ரகசியங்களை பகிர்ந்த ARமுருகதாஸ்,A r murugadoss reveals secrets of thuppakki movie | Galatta

இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்த தர்பார் திரைப்படம் தான் அவரது இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான திரைப்படம். கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த ஒரு பெரும் வெற்றியை பெற தவறிய தர்பார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் வருகிற ஏப்ரல் 7ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான நேர்காணலில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் துப்பாக்கி திரைப்படம் குறித்து இதுவரை வெளிவராத பல ரகசியங்களை பகிர்ந்து கொண்டார். முன்னதாக ஸ்கிரிப்ட்டில் எழுதும் போதே எப்படியாக நேரத்தையும் மனதில் வைத்து எழுத வேண்டும் என்பது குறித்து விவரித்து பேசிக் கொண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள், “துப்பாக்கி திரைப்படத்தில் பணியாற்றும் போது படத்தொகுப்பின் சமயத்தில் ஸ்ரீகர் பிரசாத் அவர்களோடு உட்கார்ந்தபோது, எனக்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை தூக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. 20 நிமிடத்திற்கு எதை நீக்குவது என்றவுடன், அப்போது நாம் ஆண்டனி இடமிருந்து நேரடியாக இங்கே வந்திருக்கிறோம். ஆண்டனி உடன் பணியாற்றுவது வேறு ஒரு ஸ்டைலில் இருக்கும். மிகவும் வேகமாக இருக்கும். கஜினி அந்த மாதிரியான ஒரு ஸ்டைலில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் பார்த்தீர்கள் என்றால், கதையாகவே இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக போய்க் கொண்டிருக்கும். எனக்கு இதில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு படத்தொகுப்பாளர் தேவைப்பட்டது. எனவே ஸ்ரீகர் பிரசாத் சாரிடம் போகும்போது, அவர் படத்தொகுப்பு செய்து கொண்டிருந்த சமயத்தில் அந்த க்யூப் வைத்து யோசிக்கும் காட்சியில், க்யூப் கையில் வைத்திருக்கும் போது ஒரு கட், யோசித்தார் ஒரு கட், உட்கார்ந்தார் ஒரு கட், க்யூப் கீழே விழுந்தவுடன் ஒரு கட் என அதை முடித்து விடுங்கள் என்றேன். ஆனால் ஸ்ரீகர் பிரசாத் சார் சொன்னார், “இல்லை அவர் யோசித்தார் என்பதை காட்டுவதற்கு கொஞ்சம் நேரம் வேண்டும்.” நான் ஒவ்வொரு வினாடியாக எப்படி குறைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன். இந்த இடத்தில் மிக நீளமாக இருக்கிறது சார். எனவே க்யூப் கையில் வைத்திருக்கும் போது ஒரு கட், யோசித்தார் ஒரு கட், உட்கார்ந்தார் ஒரு கட், க்யூப் கீழே விழுந்தவுடன் ஒரு கட் போதும் சார் அதோடு வைத்து விடுங்கள் என்றேன். “இல்லை இல்லை அவருடைய எண்ணங்களில் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்றார்” எனக்கு இருப்பதையே குறைக்க முடியவில்லை. அவர் அவ்வளவு நீளமாக வைத்தார். படம் வந்த பிறகு நிறைய ரசிகர்கள் சொன்னார்கள் விஜய் சார் திட்டம் போடுகிறார் என்பதே புதிதாக இருந்தது. விஜய் சார் அதிரடியாக ஆக்சன் பண்ணுவார் என்று பார்த்து இருக்கிறோம் ஆனால் உட்கார்ந்து நடந்து இவ்வளவு தூரம் பண்ணும் போது இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இதை நான் ஸ்ரீகர் பிரசாத் சாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். தொடர்ந்து அது இசை கோர்ப்புக்கு வரும்போது அந்த மௌனமான இடத்திற்கு ஒரு இசை சேர்த்தோம் அது ஒரு ஃபீல்... எனக்கு ஏதாவது குறைக்க வேண்டும் என்பதற்காக நான் இதை குறைத்து விட முடியாது.” என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…
 

பள்ளியில் என்னென்ன சேட்டைகளுக்கு அடி வாங்கினார்?- சூரியின் கலாட்டாவான நினைவுகளை பகிர்ந்து கொண்ட வாத்தியார்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

பள்ளியில் என்னென்ன சேட்டைகளுக்கு அடி வாங்கினார்?- சூரியின் கலாட்டாவான நினைவுகளை பகிர்ந்து கொண்ட வாத்தியார்! ட்ரெண்டிங் வீடியோ

“இன்னும் அந்த ஸ்டைல் படங்களில் இருக்கிறது!”- சூரி போல் நடந்து காட்டிய அவரது பள்ளிக்கூட வாத்தியார்! கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

“இன்னும் அந்த ஸ்டைல் படங்களில் இருக்கிறது!”- சூரி போல் நடந்து காட்டிய அவரது பள்ளிக்கூட வாத்தியார்! கலகலப்பான வீடியோ இதோ

'இதுதான் என் கனவு படம்!'-  ஆச்சரியப்படுத்தும் அட்டகாசமான படத்தின் ருசிகர தகவல்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரல் வீடியோ இதோ
சினிமா

'இதுதான் என் கனவு படம்!'-  ஆச்சரியப்படுத்தும் அட்டகாசமான படத்தின் ருசிகர தகவல்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரல் வீடியோ இதோ