"அந்த காட்சி 'Wow' அப்படி இருந்தது" - இயக்குனர் ராஜீவ் மேனன் விடுதலை படம் குறித்து பகிர்ந்த தகவல்- முழு வீடியோ இதோ...

விடுதலை படத்தில் ரயில் விபத்து காட்சி குறித்து இயக்குனர் ராஜீவ் மேனன் – Director Rajiv menon about train accident scene | Galatta

அட்டகாசமான பீரியட் கிரைம் திரில்லராக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் விடுதலை. RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க இரண்டு பாகங்களாக எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை தழுவி உருவான இப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி அவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய R.ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார். இளையராஜா இசையில் பாடல்கள் முன்னதாக மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான இப்படம் கடந்த மார்ச் 31ம் தேதி உலகமெங்கும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விடுதலை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் கலந்து கொண்டு விடுதலை திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் படத்தில் இடம் பெற்றுள்ள ரயில் காட்சி குறித்து அவர் பேசுகையில்,

"வழக்கமான ஒரு போலிஸ் கொஞ்சம் விசாரணை என்று அவர்கள் வேறு பக்கத்தில் இருப்பார்கள் மேலும் தனிப்பட்ட செயல்பாடுகள் இருக்கும்.  ஆனால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பங்கம் விளைவிக்கும் அளவு ஒரு விஷயம் நடக்கும் போது தாற் பெரிய தாக்கம் வரும். அதை கருவாக கொண்டு படத்துடைய ஆரம்பத்திலே காட்டிவிட்டால் இவ்ளோ பெரிய விபத்து, இவ்ளோ பேர் சாவுறாங்க.. இதையெல்லாம் ஒரே டேக்கில் எடுக்கும் போது ஒருகட்டத்தில் "Wow What is that?"  என்ற உணர்வை கொடுக்கிறது. 

அதிலிருந்து நேரா அரசாங்கத்தின் வெளிபாடு என்னவாக இருக்கும் என்பதை படம் முழுக்க கொண்டு சென்றுள்ளனர். ஒரு போராளி கூட்டம் அதில் பாதிக்கப்பட்ட மக்கள். அந்த மக்களின் தாக்கத்தை காட்டுவதற்காக இந்த விபத்து. அதிலே அவர் படத்தின் தாக்கத்தை நிரூபித்து விட்டார். தொடர்ந்து இந்த படம் முழுக்க வன்முறை நடக்கும். ஏன் நடக்கும் யார்மீது அதன் தாக்கம் இருக்கும் என்ற உணர்வை கொடுக்க இந்த காட்சி உதவியது." என்றார் இயக்குனர் ராஜீவ் மேனன்.

மேலும் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் வெற்றிமாறனின் விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

“நான் பஸ்ல போயிருக்கேன்.. கஷ்டப்பட்டிருக்கேன்.” தனது ஆரம்பகால பயணம் குறித்து மனம் திறந்த நடிகை வாணி போஜன் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“நான் பஸ்ல போயிருக்கேன்.. கஷ்டப்பட்டிருக்கேன்.” தனது ஆரம்பகால பயணம் குறித்து மனம் திறந்த நடிகை வாணி போஜன் – முழு வீடியோ உள்ளே..

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் புதிய படம்.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட தனுஷ்.. - – ரசிகர்களால் வைரலாகும் முதல் பார்வை இதோ..
சினிமா

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் புதிய படம்.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட தனுஷ்.. - – ரசிகர்களால் வைரலாகும் முதல் பார்வை இதோ..

விடுதலை பாகம் 1-ல் விசாரணை படத்தின் சாயலா?- வேறுபாட்டை கூறி சரியாக விளக்கம் அளித்த நடிகர் சேத்தன்! வீடியோ இதோ
சினிமா

விடுதலை பாகம் 1-ல் விசாரணை படத்தின் சாயலா?- வேறுபாட்டை கூறி சரியாக விளக்கம் அளித்த நடிகர் சேத்தன்! வீடியோ இதோ