இன்றைய இளைஞர்களின் இதயத்துடிப்பாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.2012-ல் வெளியான தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

கொலவெறி என்னும் தனது முதல் பாடலிலேயே உலகம் முழுவதும் ரீச் என தொடங்கியது இந்த வைரல் இளைஞனின் பயணம்.கொலவெறி கொடுத்த நம்பிக்கை மேலும் ஊக்கத்துடன் அனிருத் இசையமைக்க தனது முதல் படமான 3 வெளியானது.இன்றும் அந்த படத்தின் காதல் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

8 years of Anirudh Ravichander Moonu To Master

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் இரண்டு வளரும் நாயகர்களும் இணைய இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்தது.தொடர்ந்து வணக்கம் சென்னை,மான் கராத்தே என்று இளைஞர்களின் இசைநாயகனாக மாறத்தொடங்கினார் அனிருத்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

இவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்த்த படம் தனுஷின் வேலையில்லா பட்டதாரி.இவருக்கென்று  ரசிகர் பட்டாளத்தை இந்த படம் பெற்று தந்தது.அனிருத்தை அடுத்த லெவலிருக்கு எடுத்துச்சென்ற படம் விஜயின் கத்தி.

8 years of Anirudh Ravichander Moonu To Master

இசையமைப்பாளராக அறிமுகமாகி 2 வருடத்திலேயே விஜய் போன்ற முன்னணி நடிகரின் படம் அதுவும் துப்பாக்கியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் என்று எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்தன.இதனை எப்படி அனிருத் போன்ற  இசையமைப்பாளர் என்று எல்லாரும் காத்திருந்தனர்.இந்த எதிர்பார்புகளையெல்லாம் அடித்து நொறுக்கும் படியாக இந்த படத்தின் பாடல்களும்,பின்னணி இசையும் இருந்தது.இன்றும் பல விஜய் ரசிகர்களின் போன் ரிங்க்டோன் ஆக கத்தி இருப்பதை பார்க்கமுடியும்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

இதற்கு அடுத்து காக்கி சட்டை,மாரி,நானும் ரௌடி தான் என்று தொட்டதெல்லாம் ஹிட் அடித்தது.அனிருத்துக்கு அடுத்ததாக ஒரு ஜாக்பாட் அடித்தது.தளபதிக்கு இசையமைத்த அனிருத் அடுத்ததாக தல அஜித்துக்கு தொடர்ந்து இரண்டு படம் வேதாளம்,விவேகம் என்று இரண்டிலுமே தெறியான தனது இசையால் ரசிகர்களை ஈர்த்தார் அனிருத்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

அடுத்ததாக ரெமோ,தங்கமகன்,வேலைக்காரன்,கோலமாவு கோகிலா என எல்லா படத்திலும் தனது இசையின் மூலம் ரசிகர்களை அள்ளிக்குவித்தார் அனிருத்.இப்படி அடுத்த ஜெனெரேஷனின் தவிர்க்க முடியாத இசைநாயகனாக அனிருத் உயர்ந்துகொண்டிருக்க அவரை இன்னும் உயரம் கொடுசேர்க்க வந்தது ஒரு படம்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட,மற்ற ஹீரோக்களுக்கே தனது இசையை அலறவிட்ட அனிருத் சூப்பர்ஸ்டார் ரசிகராக இந்த படத்தில் மரண மாஸ் காட்டியிருந்தார்.இதனை தவிர தெலுங்கிலும் Agnyathavaasi,ஜெர்சி,கேங் லீடர் என்று தனது வெற்றிகொடியை அனிருத் நாட்டினார்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

இதனை தொடர்ந்து மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் தர்பார் படத்தில் இணைந்து இசையில் சும்மா கிழி என்று கிழித்து தொங்கவிட்டார்.மீண்டும் அனிருத் விஜயின் மாஸ்டர் படத்திற்கு இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.இதனை தொடர்ந்து அனிருத் எப்படி இந்த படத்திற்கு இசையமைக்கப்போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

கத்தி அனிருத்தின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் ஆக இன்றும் இருக்கிறது இதனை தாண்டி மாஸ்டர் ஆல்பம் ஹிட் ஆகுமா என்று எதிர்பார்த்திருக்க மாஸ்டர் ஆல்பமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இந்தியன் 2,டாக்டர் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

8 வருடங்களில் அபார வளர்ச்சி என்றும் சிலர் லக் என்றும் அனிருத்தை கூறினாலும்.ஒருவர் லக்கை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வரமுடியாது.ஒவ்வொரு படத்திற்கும் அவர்போடும் உழைப்பு அவரை இந்த உயரத்துக்கு உயர்த்தியுள்ளது.

8 years of Anirudh Ravichander Moonu To Master

ரஜினி,கமல்,அஜித்,விஜய் என்று இந்த நான்கு பெரிய ஹீரோக்களுடன் வேலைபார்த்த சில இசையமைப்பாளர்கள் லிஸ்டில் இந்த இளம் நாயகனும் இணைந்துள்ளார்.அதுவும் இந்த 8 வருடத்தில் ரஜினிக்கு 2 படம்,அஜித்திற்கு 2 படம்,விஜய்க்கு 2 படம் என மிரட்டியிருக்கிறார் அனிருத்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

தொட்டதெல்லாம் ஹிட் ஆகும் இந்த வைரல் விரல்கள் இன்னும் பலகாலம் தொடர்ந்து நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே நமது ஆசை.கலாட்டா சார்பாக அனிருத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

8 years of Anirudh Ravichander Moonu To Master

நேற்று தனது யூடியூப் சேனல் மூலம் இந்த 8 வருடங்களை கொண்டாடவும் கொரோனா காரணமாக சோர்ந்திருந்த மக்களை பாசிட்டிவ் ஆக்கவும் அனிருத் வந்தார்.கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் ரசிகர்களுக்காக தனது படத்திலுள்ள பாடல்களை பாடியுள்ளார் அனிருத் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்