விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த நிகழ்ச்சி ஜனவரி 22ஆம் தேதி முதல் வாரக்கடைசியில்  ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ப்ரோமோ வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ப்ரோமோவின் மூலம் இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.பாரதி கண்ணம்மா தொடரில் பிரபலமான ரோஷ்ணி ஹரிப்ரியன்,இளம் நடிகை அம்மு அபிராமி,காமெடி நடிகை விதியுலேகா ராமன்,நடிகை ஷ்ருதிகா அர்ஜுன்,கிரேஸ் கருணாஸ்,மனோபாலா,நடிகர் தர்ஷன்,நடிகர் சந்தோஷ் பிரதாப்,ஆண்டனி தாசன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர்.

நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.தற்போது சில புதிய கலக்கலான ப்ரோமோ வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்