கள்ளக் காதலன் பிரிந்து சென்று விடுவாரோ என்ற பயத்தில், கள்ளக் காதலனுக்கு தன்னுடைய மகளையே கள்ளக் காதலி திருமணம் செய்து வைத்த கொடூரசம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த 48 வயதான கண்ணன், தனது அத்தை மகளான மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

Women marries daughter to man having affair

கட்டிட வேலை செய்து வரும் கண்ணன், கடந்த 2005 ஆம் ஆண்டு வந்தவாசியில் கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில், 16 வயது சிறுமியைத் திருமணம்செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பெங்களூர் அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இது தொடர்பாக கண்ணனை தேடி வந்த போலீசார், 3 மாதங்களுக்குப் பிறகு கண்ணனை கைது செய்து, சிறுமியை மீட்டனர். பின்னர், சிறுமியின் பெற்றோர்கேட்டுக்கொண்டதால், கண்ணனை சிறையில் அடைக்காமல், முதல் மனைவியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை ஊரப்பாக்கத்தில் கட்டிட வேலைக்கு சென்ற கண்ணன், அங்கு வேலை செய்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த40 வயதான யுவராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இது தொடர்பாக கண்ணனின் முதல் மனைவிக்குத் தெரியவந்த நிலையில், இது தொடர்பாக கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது, கணவன் - மனைவிஇருவருக்கும் இடையே கடும் சண்டை வந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த கண்ணனின் மனைவி, அங்குள்ள சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக கண்ணனை அழைத்துவிசாரணை நடத்திய போலீசார், கண்ணனுக்கு அறிவுரை கூறி, முதல் மனைவியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Women marries daughter to man having affair

பின்னர், சில மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் யுவராணி உடன் தனது கள்ளக் காதலை தொடர்ந்துள்ளார்.

மேலும், தனது கள்ளக் காதலை கண்ணனின் முதல் மனைவி மீண்டும் பிரித்து விடுவாரோ என எண்ணி, தனது 19 வயது மகளை, கள்ளக் காதலன்கண்ணனுக்கு, கள்ளக் காதலி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த விவகாரம் சில மாதங்கள் கடந்த நிலையில், கண்ணனின் முதல் மனைவிக்கு தெரிந்த நிலையில், மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது, போலீசார் அந்த 19 வயது இளம் பெண்ணை அழைத்து பேசி உள்ளனர். அப்போது, அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால்,அதிர்ச்சியடைந்த போலீசார், கள்ளக் காதலி யுவராணியையும், அவரது கள்ளக் காதலன் கண்ணனையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், வீட்டிற்கு வந்த மறுநாளே கண்ணன், மீண்டும் கள்ளக் காதலியைத் தேடி சென்றுள்ளார். இதனால், மனமுடைந்த கண்ணனின் முதல் மனைவி, தூக்கமாத்திரி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார்,கண்ணனை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.