கள்ளக் காதலியை கொல்ல துப்பாக்கியுடன் வந்த நபர், அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவாவை சேர்ந்த 38 வயதான பங்கஜ் ராய்,  அங்குள்ள ஓட்டலில் குக்காக (சமையல்) பணியாற்றி வருகிறார்.

இவருக்கு, சமூக வலைத்தளம் மூலம் மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

Mumbai youth arrest murder attempt on girl

இதனால், அந்த நபர் மும்பை வந்து அடிக்கடி அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இப்படியாக, இந்த உல்லாச வாழ்க்கை சில காலம் சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் பங்கஜ் ராயின் செயல்பாடு அந்த பெண்ணுக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

இதனால், பங்கஜ் ராய் உடன் உள்ள கள்ளத் தொடர்பை அந்த பெண் துண்டித்துள்ளார். இதனால், கடும் கோபமடைந்த பங்கஜ் ராய், அந்த பெண்ணை கொலை செய்வதற்காக, துப்பாக்கியுடன் மும்பை வந்துள்ளார்.

மும்பை சம்ந்தா நகர் பகுதியில் அந்த நபர் நடந்து செல்லும்போது, அந்த பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக பங்கஜ் ராய் நடந்து சென்றதைப் பார்த்த போலீசார், அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். 

இதில், அவரிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கியும், தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், பங்கஜ் ராயை கைது, செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தான், இந்த கள்ளக் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.