சீக்கிரம் தூங்க வைக்க 3 வயது குழந்தைக்கு மது கொடுத்து, கள்ளக் காதலனுடன் உல்லாசம் அனுபவித்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகரிகம் தோன்றியது முதல், நாகரிகமற்ற முறையில் தற்போது நடந்துகொள்வது வரை, கள்ளக் காதல் எல்லாம் மகிழ்வாய் அமைந்து விடுவதில்லை. 

எல்லா கள்ளக் காதல் கதைகளும், நாகரிகமற்ற முறையில் தான் கட்டித் தழுவிச் சங்கமிக்கிறது.  நகர்கிறது. அப்படிப்பட்ட முறைகேடானவர்களிடம்  நியாயம், தர்மம் எதிர்பார்ப்பது என்பது மடமையின் உச்சம்.

கட்டுக்கடங்காத காமத்தைத் தருவதே கள்ளக் காதல். அப்படி, கட்டுப்படுத்த முடியாத காமம் வெளிப்படும் போது, எதிரே தென்படுவது யாராக இருந்தாலும்.. அவர்கள், உயிரற்ற பொருளாகவே கருதப்படுவார்கள்  என்பதற்கு ஓமை எழுதுகிறது.. இந்த கள்ளக் காதல் கதை.

Police arrest mother for drugging child for affair

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பாகலூரைச் சேர்ந்த நந்தினி, கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரை விட்டுப் பிரிந்து, தனது 3 வயது மகள் நாயனாஸ்ரீ உடன் தனியாக வசித்து வருகிறார்.

இதனிடையே, நந்தினிக்கு அப்பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

மேலும், மது பழக்கத்திற்கு அடிமையான அசோக், நந்தினியையும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்கி உள்ளார். இதனால், இருவரும் உல்லாசம் அனுபவிக்கும்போது, மது குடித்துவிட்டு உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அப்படி, கள்ளக் காதல் ஜோடி இருவரும், மது போதையில் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருக்கும்போது, நந்தினியின் 3 வயது குழந்தை அழுதுள்ளது.

Police arrest mother for drugging child for affair

இதனால், குழந்தையைச் சீக்கிரம் தூங்க வைக்க நினைத்த தாய், 3 வயது சிறுமிக்குக் கட்டாயப்படுத்தி மதுவை வாயில் ஊற்றி உள்ளார். இதனால், அலறி துடித்த சிறுமியின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.

அப்போது, சிறுமி ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், சிறுமியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அத்துடன், சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்த தாய் நந்தினியையும், அதற்கு உடந்தையாக இருந்த கள்ளக் காதலன் அசோக்கையும் கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.