மனைவியின் கள்ளக் காதலை தட்டிக் கேட்ட 2 வது கணவனை, அவரது மனைவியே கொன்று புதைத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அடுத்து உள்ள அண்ணாநகரைச் சேர்ந்த 33 வயதான அபி என்கிற அபிராமி, அதே பகுதியில் சொந்தமாக அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

இவரது, முதல் கணவர் உயிரிழந்த நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக, 19 வயதான காளிராஜ் என்ற இளைஞரை 33 வயதான அபி என்கிற அபிராமி, 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.

இதில், 19 வயதான காளிராஜ், அந்த பகுதியில் மெக்கானிக்கை பணியாற்றி வந்தார். இப்படியாக, 33 வயதான அபிராமியை 19 வயதான காளிராஜ் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவரது வாழ்க்கை உல்லாச வாழ்க்கையாகவே சென்று உள்ளது. 

இப்படியான நிலையில், காளிராஜ் கடந்த 3 ஆண்டுகளாக காளிராஜ், அவரது வீட்டிற்கு செல்லாவே இல்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரின் தாயார் தனது மகனை பார்க்க வேண்டும் என்றும், அவரை கண்டுப்பிடித்து தர வேண்டும் என்றும் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், காளிராஜை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமி திருமணம் செய்துகொண்டு, வாழ்ந்து வந்த விசயம் போலீசாருக்கு தெரிய வந்தது. 

இதனையடுத்து, அபிராமியை தேடிக் கண்டுப்பிடித்த போலீசார் அவரிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணமாக பதில் அளித்து உள்ளார்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார, அபிராமியை தங்களது பாணியில் விசாரித்து உள்ளனர். இந்த விசாரணையில், “2 கணவன் காளிராஜூடன் வாழ்ந்து வந்த அபிராமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் புதிதாக பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இந்த விசயம், 2 வது கணவன் காளிராஜ் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த 2 கணவன் காளிராஜ், மனைவியிடம் சண்டைக்கு சென்று உள்ளார். இதில், கடும் கோபம் அடைந்த அவர் மனைவி அபிராமி, தனது கள்ளக் காதலன் மாரிமுத்துவுடன் இணைந்து, கடந்த 3 வருடங்களுக்கு முன்பே 2 வது கணவன் காளிராஜை கொலை செய்தது” தெரிய வந்தது. 

இதனையடுத்து, காளிராஜின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக அபிராமியையும், அவரது கள்ளக் காதலன் மாரிமுத்துவையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.