காதலனை கட்டிப் போட்டு, கண் முன்னே காதலியான கல்லூரி மாணவியை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்து உள்ள கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ஹரி கிருஷ்ணன் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். ஹரி கிருஷ்ணன் என்பரும் கல்லூரி மாணவர் ஆவார். இப்படியாக, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கல்லூரி மாணவர்களான காதலர்கள் இருவரும், கடந்த 23 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு ஜோடிகளாக சென்று உள்ளனர்.

அப்போது கமுதி அருகே இருக்கும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த 24 வயதான பத்மாஸ்வரன், திருச்சுழி அருகே உள்ள நத்தகுளத்தைச் சேர்ந்த 24 வயான தினேஷ் குமார், 23 வயதான அஜித் குமார் ஆகிய 3 பேரும், அந்த பகுதிகளில் ரவுடிகளால் ஊர் சுற்றி வந்த நிலையில், இந்த 3 பேரும், இந்த காதல் ஜோடிகள் தனிமையில் இருப்பதைப் பார்த்து, அவர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த காதலனை கடுமையாக தாக்கி, அந்த காதலியின் துப்பட்டாவால் காதலனை கட்டிப்போட்ட அந்த ரவுடி கும்பல், அந்த காதலன் கண் முன்னாடியே அந்த காதலியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பின்னர், அந்த காதல் ஜோடிகளிடம் இருந்து அவர்கள் வைத்திருந்த செல்போன், தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்துக் கொண் உள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்து வந்த பாதிக்கப்பட்ட அந்த காதல் ஜோடி, இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அதன்படி, சம்மந்தப்பட்ட அந்த 3 ரவுடிகளில் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ரவுடிகளை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. ட்ட நிலையில் பத்மாஸ்வரனையும், தினேஷ்குமாரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன், கைது செய்யும் போது தப்பித்து ஓடிய ரவுடி அஜித் குமாரையும் திருப்பூரில் வைத்து, போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

எனினும், இந்த கொடுமையான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காதலன்  ஹரிகிருஷ்ணன், ஊர் திரும்பிய நிலையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, விஷம் குடித்து உள்ளார். பின்னர், அங்குள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிறகு, தற்போது வீடு திரும்பி உள்ளார்.

அதே போல், காதலியான அந்த கல்லூரி மாணவியும், தனது வீட்டில் இருந்தபடியே விஷம் குடித்த நிலையில், அவரும் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தான், தற்கொலைக்கு முயன்ற பாதிக்கப்பட்ட மாணவி, முன்னதாக அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். 

அந்த வாக்குமூலத்தில், “எனது காதலனை துப்பட்டாவால் கட்டிப்போட்டு விட்டு, என்னை அந்த 3 ரவுடிகளும் பாலியல் பலாத்காரம்” செய்தனர் என்று, வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இந்த சூழலல் தான், காதல் ஜோடியை தாக்கியதாக மட்டும் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அது போலீசாருக்கு எதிராக கடும் கண்டன குரல்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் தகுந்த நடிவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் துறை உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இச்சம்வம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.