இந்தியாவின் சக்தி வாய்ந்த முதல் 100 பேர் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார்.

“இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையானது, கடந்த ஒரே ஆண்டில் 11 சதவீதம் அளவிற்கு உயர்ந்து உள்ளதாக” கடந்த மாதம் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி, பெரும் வைரலானது.

அதே போல், “இந்தியாவிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலம் பீகார் என்றும், ஏழைகள் குறைந்த மாநிலம் கேரளா” என்றும், கடந்த சில மாதங்களுக்கு மத்திய அரசின் அமைப்பான நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இப்படியாக, இந்தியாவில் புகழ்மிக்க இடங்கள் மற்றும் புகழ்மிக்க மனிதர்கள் பற்றிய ஆய்வுகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருவது வாடிக்கைான ஒன்று தான்.

அந்த வகையில், இந்தியாவின் சக்தி வாய்ந்த முதல் 100 பேர் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி, இந்தியாவில் செயல்படும் பிரபலமான ஆங்கில நாளிதழ் ஒன்று, “இந்தியாவின் சக்தி வாய்ந்த டாப் 100 நபர்கள்” என்ற ஒரு பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது. 

அந்த பட்டியலில், “பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, “இந்தியாவின் சக்தி வாய்ந்த 100 நபர்கள்” என்ற தலைப்பில், அந்த ஆங்கில நாளிதழ் இன்று அறிக்கை வெளியிட்டு உள்ளது. 
இது தொடர்பான அந்த ஆய்வறிக்கையில், 

- இந்தியாவின் சக்தி வாய்ந்த டாப் 100 நபர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் இருக்கிறார்.

- 2 ஆம் இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம் பெற்று உள்ளார்.

- 3 ஆம் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெயர் இடம் பெற்று உள்ளது.

- 4 வது இடத்தில் ஜே.பி.நட்டா உள்ளார்.

- 5 வது இடத்தில் முகேஷ் அம்பானி பெயர் இடம் பெற்று உள்ளது.

- அதே போல், கடந்த ஆண்டு 13 வது இடத்தில் இருந்த உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத், இந்தாண்டு 6 வது இடத்துக்கு முன்னேறி, செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் முன்னேறி உள்ளார்.

- 7 வது இடத்தில் கவுதம் அதானி பெயர் இடம் பெற்று உள்ளது. 

- 8 வது இடத்தில் அஜித் தோவல் பெயர் உள்ளது. 

- 9 வது இடத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் இடம் பெற்று உள்ளது. 

- 10 வது இடத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் உள்ளது. 

இப்படியாக, இந்த 10 பேரே இந்தியாவில் டாப் 10 செல்வாக்கு மிக்க மனிதர்களாக திகழ்கின்றனர்.

அதே போல்,

- 11 வது இடத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி பெயர் இடம் பெற்று உள்ளது. 

- 12 வது இடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா பெயர் இடம் பெற்று உள்ளது. 

- 13 வது இடத்தில் ராஜ் நாத் சிங் பெயர் உள்ளது. 

- 14 வது இடத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் பெயர் இடம் பெற்று உள்ளது. 

- 15 வது இடத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இடம் பெற்று உள்ளார்.

- 16 வது இடத்தில் உத்தவ் தாக்கரே இடம் பெற்று உள்ளார்.

- 23 வது இடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் இடம் பெற்று உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, அவருக்கு மிகப் பெரும் அளவில் தொடர் வெற்றிகளை பெற்றார் என்றும், இதன் மூலம் அவர் இந்த 23 வது இடத்திற்கு முன்னேரி உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

- 24 வது இடத்தில் பினராயி விஜயன் இடம் பெற்று உள்ளார். 

- 27 வது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடம் பெற்று உள்ளார்.

-  39 வது இடத்தில் ஜெகன் மோகன் ரெட்டி இடம் பெற்று உள்ளார்.

- 51 வது இடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இடம் பெற்று உள்ளார். 

- 78 வது இடாத்தில் பிரியங்கா காந்தி இடம் பெற்று உள்ளார். 

- 94 வது இடத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் பெயர் இடம் பெற்று உள்ளது.