தேமுதிக தவிர மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி ஆலோசனை, வேட்பாளர் பட்டியல் தயார் செய்வது என பரப்பரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் , தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடக்க இருக்கிறது. 


 2021-ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்திற்குப் பின்பு, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தேர்தலுக்காக தேமுதிக ஆயத்தமாகி வருவதாகவும், விஜயகாந்த் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று பிரேமலதா தெவித்திருந்த நிலையில்,


தேமுதிக கூட்டம் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சியின் தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. ஆலோசனை கூட்டம்அதில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தேமுதிகவின் நிறுவனதலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 


திமுக பக்க செல்ல வாய்ப்பு அதிகம் என்ற கருத்து நிலவும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? என்று பல எதிர்ப்பார்ப்புகள் எழுந்து உள்ளது.


மேலும் விஜயகாந்துக்கு  சில தினங்களுக்கு முன்பதான் ஸ்பீச் தெரபி தரப்பட்டு குணமாகி வருவதாக செய்தி வெளியிடப்பட்டது. இதனால் விஜயகாந்த்தின் வருகை பலத்த ஆவலை பொதுமக்களிடம் நிலவி வருகிறது. நாளை மறுநாள் விஜயகாந்த், கட்சி அலுவலகத்துக்கு வருகை தர இருப்பதும், தேர்தல் குறித்து பேச இருப்பது தேமுதிகாவினற்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.