தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலம் புனித  பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி திட்டம்  2011ம் ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 20,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 


இப்புனிதப் பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹெம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம்  மற்றும் பிற கிறுஸ்துவ புனித தளங்களுக்கு பொருந்தும். 


ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் , கிறுத்துவர்களின்  புனிதப் பயணத்துக்கு வழங்கப்பட்டு வந்த 20,000 ரூபாய் உதவி தொகை தற்போது 37,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது என தமிழக அரசு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.