“என் சேனலை முடக்கினால் நான் தீ குளிப்பேன்” என்று டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா ஆவேசமாகக் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில், “ரௌடி பேபி சூர்யா” என்றால், டிக்டாக் பிரியர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு அவர் பிரபலமாகிவிட்டார்.

திருப்பூர் அய்யம்பாளையம் அடுத்த சபரி நகரைச் சேர்ந்த “சுப்புலட்சுமி” தான், டிக்டாக்கில் தன் பெயரை “சூர்யா” என்ற பெயரில் தொடர்ந்து அலப்பறைகள் செய்து சேட்டையான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதால், அவர் சொந்தமாக யூடியப் சேனல் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அந்த சேனலில், அவர் மிகவும் ஆபாசமாகப் பேசி வீடியோக்கள் வெளியிடுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்பவர், ரவுடி பேபி சூர்யா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், “நான் யூடியூப் பயன்படுத்தி வருவதாகவும், என்னுடைய மகன் மற்றும் மகள்கள் தன்னுடைய செல்போனை ஆன்லைன் வகுப்பிற்காகப் பயன்படுத்தும் போது, ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா இருவரும் அவர்களின் யூ ட்யூப் சேனலில் பொதுத் தளத்தில் ஆபாசமாகப் பேசுவதும், அரைகுறை ஆடையுடன் தோன்றுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், இந்த கொரோனா பாதிப்பிற்கு உதவி செய்ய பொது மக்களிடம் பணம் வசூலிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார் என்றும், மதுவை வாங்கி குடிப்பது மற்றும் விற்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவது தனது செல்போனில் தனக்கு வருவதாகவும்” அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

“இதனால், எங்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதால், ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிடும் ரவுடி பேபி சூர்யா வின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும்” என்றும், தன்னுடைய புகார் மனுவில் அவர் பதிவு செய்து உள்ளார்.

இந்த புகாரானது, முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பி வைத்திருந்தார். இதற்கான நகலை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கும் அவர் அனுப்பி வைத்திருந்தார். 

இந்த செய்தி, வெளியான நிலையில், இந்த புகார் மனு குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் பரிந்துரை செய்து உள்ளார். அந்த பரிந்துரை கடிதத்தில் , “இந்த புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு” திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான், ரவுடி பேபி சூர்யா தனது யூடியூப் சேனலில் தற்பேர்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓர் வேண்டுகோள் வைப்பதாக” அவர் குறிப்பிட்டு உள்ளார். 

அதன் படி, “எனது சேனலை முடக்கக் கோரி நீதிபதி உட்பட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாகவும், நான் ஆபாசமாகப் பேசுவதாகவும், என்னை ஆபாசமாகப் பேச தூண்டியது யார்?” எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

குறிப்பாக, “நான் வறுமையில் இருந்த போது, யாரும் எனக்கு உதவி செய்யவில்லை என்றும், என்னுடைய பேர் தெரிய வேண்டும், என்னுடைய புகழ் தெரிய வேண்டும், என்னிடம் உள்ள அந்த கலைகள் தெரிய வேண்டும்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

அதே போல், “என்னுடைய வீடியோவை வெளியிடும் மற்ற யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும், நான் உழைத்துச் சாப்பிடுவதாகிறேன் என்றும், அதனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்” என்றும், அவர் சற்று காட்டமாகவே பேசி உள்ளார்.

மிக முக்கியமாக, “எனது சேனலை நீங்கள் முடக்கினால், தான் தவறான வழிக்குப் போவேன் என்றும், சத்தியமா நான் தவறான வழிக்குப் போவேன் என்றும், மீண்டும் மீண்டும் அதையே மறுபடியும் மறுபடியும் கூறி, ஆவேசமாகப் பேசி உள்ளார். 

அதே போல், அரசுக்கும் போலீசாருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், “என்னைக் கைது செய்தால், நான் தீ குளிப்பேன்” என்றும், அவர் ரவுடி பேபி சூர்யா பகிரங்கமாக மிரட்டல் விடுத்து உள்ளார்.