11 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த 24 வயதான மணிமாறன் என்பவர், வீடு வீடாகச் சென்று உணவு டெலிவரி செய்யும் பிரபல  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இப்படியான சூழ்நிலையில் தான், ஈரோட்டைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் 24 வயதான மணிமாறனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இவருக்குப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும், தங்களது செல்போன் எண்ணைப் பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் வெகு நேரமாகத் தொலைப்பேசியில் பேசி இன்னும் நெருக்கமானார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி மணிமாறன், பலவிதமான ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்த 11 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இது தொடர்பாக அங்குள்ள ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியைக் கடத்தச் சென்ற மணிமாறனையும், அந்த மாணவியையும் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இப்படியான நிலையில், ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் சம்மந்தப்பட்ட மாணவியுடன் ஊர் சுற்றித்திரிந்த மணிமாறனை, மகளிர் போலீசார் மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், “11 ஆம் வகுப்பு மாணவியை, மணிமாறன் ரயில் மூலம் சேலம் மாவட்டத்திற்கு கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து அந்த சிறுமியை அவர் திருமணம் செய்துகொண்டது” தெரிய வந்தது.

குறிப்பாக, “சிறுமியைத் திருமணம் செய்துகொண்டு, சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம்” செய்ததும் தெரிய வந்தது. 

இதனையடுத்து, மாணவியைக் கடத்திச் சென்ற மணிமாறன் மீது கடத்தல், போக்சோ சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.