சில தினங்களுக்கு முன்பு  ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த்  ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்துக்கு பின் அவர் சொன்னது , ’’ நான் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உடன் இருப்போம் என இருப்போம் என நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள். அது அவர்களுடைய கருத்து.  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் ” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று  தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் , ‘’  வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் , மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!! என்றும்.

மேலும் ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. ‘’மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை “ என்று தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று பல வருடங்களாக சொல்லிக்கொண்டே இருந்த ரஜினி இன்று ஒருவழியாக தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கட்சி தொடங்கும் நாளையும் தெரிவித்துள்ளார்.