உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண் முன்பு, போலீசார் ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபட்டதாக புதிய சர்சை வெடித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக புகார் அளிக்க வந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த ஒரு காவலர் ஒருவர், இந்த பெண் கூறிய புகார் பற்றி கவலைப் படாமல், அந்த போலீஸ் தன் ஆண் உறுப்பு மீது கை வைத்து, அந்த பெண் முன்னாடியே தவறான செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் அந்த பெண் இருந்த நிலையில், அந்த போலீஸ்காரர் இப்படி அறுவறுக்க தக்க செயலில் ஈடுபட்டுள்ளார். போலீசாரின் இந்த செயலைப் பார்த்து, அந்த பெண் அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டார். 

எனினும், அந்த புகார் தொடர்பாக அடிக்கடி அந்த பெண் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிர்பந்தும் வந்துள்ளது. இதனால், அந்த பெண் மீண்டும் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும், அந்த போலீஸ் அதிகாரி புகார் அளிக்க வந்த பெண்ணின் முன்னிலையில் மீண்டும் சுய இன்பம் செய்வது போல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னை வேறு எதற்கோ பயன்படுத்த அந்த போலீஸ்காரர் நினைக்கிறார் என்று எண்ணி, பயந்து போய் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

பின்னர், அந்த போலீஸ் அதிகாரியின் முகம் சுளிக்க வைக்கும் இந்த நடவடிக்கை குறித்து, அந்த பகுதியில் உள்ள சில பெண்களிடம் கூறி உள்ளார். அவர்களும், இதைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

குறிப்பாக, அந்த பகுதியைச் சேர்ந்த வேறு சில பெண்கள் புகார் அளிக்கச் சென்ற போதும், அந்த குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி இது போன்று அருவருக்கத் தக்க வகையில் நடந்து கொண்டதும் தற்போது தெரிய வந்தது. இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்த போலீஸ் அதிகாரியைச் சிக்க வைக்க முடிவு செய்தார். 

அதன்படி, கேமராவை மறைத்து வைத்துக் கொண்டு, அந்த பெண் மீண்டும் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும், அந்த போலீஸ் அதிகாரி சுய இன்பம் செய்ய நிலையில், அந்த பெண்ணிடம் தகாத முறையிலும், அறுவறுக்க தக்க முறையிலும் நடந்துகொண்டார். இந்த காட்சிகளைத் தனது செல்போனில் படம் பிடித்த அந்த பெண், அந்த பகுதி முழுவதும் பரப்பி உள்ளார்.

போலீசாரின் இந்த அறுவறுப்பான வீடியோ வெளியான நிலையில், அந்த மாவட்ட மற்றும் மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அந்த மாவட்ட எஸ்.பி குறிப்பிட்ட அந்த போலீசாரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், புகார் அளிக்க வரும் பெண்களிடம் அறுவறுப்பாக இப்படி நடந்துகொண்ட அந்த போலீசார் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரின் இந்த வீடியோ அந்த மாநிலம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.

இதனிடையே, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண் முன்னாடி, போலீஸ் அதிகாரி ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம், அந்த மாநிலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் சாத்தான் களம் லாக்கப் டெத் சம்பவம், சென்னையில் முதியவரை போலீசார் தாக்கிய நிகழ்வு, சென்னை அண்ணா நகரில் இளைஞரை போலீசார் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லுதல், கோவையில் தாய் முன்னாடியே போலீசார் சிறுவனை அடித்த விவகாரம், தென்காசியில் போலீஸ் விசாரணையில் டிரைவர் இறந்த நிகழ்வுகள் என, காவல்துறைக்கு எதிராக மிகப் பெரிய சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், நீதி மன்றமும், மனித உரிமை ஆணையமும் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மனித மீறல்கள் தொடர்பாக இருக்க, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் ரீதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.