2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்த மன்மதராசா, இரு மனைவிகளுக்கும் தெரியாமல் 10 ஆம் வகுப்பு மாணவியுடன் சுழற்சி முறையில் 
தனிக்குடித்தனம் நடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தான், இப்படியான ஒரு உல்லாச வாழ்க்கையை மன்மதராசாவாகவே ஒரு இளைஞன் வாழ்ந்து வந்திருக்கிறான்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அடுத்து இருக்கும் கலந்தபனை புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஸ்டீபன் என்ற இளைஞன், ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார். 

ஸ்டீபனின் தன்னுடைய இந்த 25 வயதிலேயே 2 மனைவிகளுடன், அதவும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதை பார்த்த அப்பகுதி மக்களும், சக இளைஞர்களும் பொறாமைப் பட்டு போனார்கள். 25 வயது இளைஞருக்கு, 2 மனைவிகளா என்ற, அந்த ஊரே வித்தியாசமாகப் பார்த்து வந்தது.

இப்படியான சூழ்நிலையில் தான், அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தார். அவரை, இந்த மன்மதராசா  ஸ்டீபன், ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, அழைத்துச் சென்று உள்ளார்.

இதனையடுத்து, பள்ளிக்கு சென்ற சிறுமியை காணவில்லை என்று, அவரது பெற்றோர் ஊர் முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். இதனையடுத்து, அங்குள்ள பணகுடி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் சென்று, “எங்களது மகளை காணவில்லை” என்று கூறி, புகார் அளித்தனர்.

அதாவது, அந்த சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து, அந்த மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி ஸ்டீபன் வந்துச் சென்று உள்ளார். இந்த விசயத்தை, அக்கம் பக்கத்திலா் உள்ளவர்கள் அந்த மாணவியின் பெற்றோரிடம் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த மாணவியை அவர்களது பெற்றோர் கண்டித்து உள்ளனர். அந்த நேரத்தில் தான், அந்த மாணவி வீட்டில் இருந்து மாயமானது தெரிய வந்தது.

இதனால், ஸ்டீபன் மீது சந்தேகம் எழுந்து, அவன் தான் எங்களை மகளை கடத்திச் சென்றிருப்பான் என்று, சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் கூறியிருந்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமி மாயமானது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அத்துடன், தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த இந்த விசாரணையில், அந்த 10 ஆம் வகுப்பு மாணவியை ஸ்டீபன் தான், ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இந்த தேடுதல் வேட்டையில், நாகர்கோவிலில் மலைப்பகுதியில் இருக்கும் மாட்டுப்பண்ணையில் சாணம் அள்ளும் வேலை பார்த்துக்கொண்டு குறிப்பிட்ட அந்த 10 ஆம் வகுப்பு மாணவியுடன் வசித்து வருவது தெரிய வந்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் ரகசியமாக சென்று ஸ்டீபனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அப்போது, அந்த மாணவியையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், “என்னை திருமணம் செய்து கொள்வதாக அழைத்து வந்து, என்னை பாலியல் உறவு கொண்டதாக” மாணவி கூறியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, ஸ்டீபனிடம் போலீசார் விசாரித்ததில், “இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகள் உடன் சுழற்சி முறையில் தனித் தனியாக குடித்தனம் நடத்தி வந்ததை” ஒப்புக்கொண்டான்.

இதனையடுத்து, சிறுமியை கடத்திய வழக்கு மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவனை போலீசார் சிறையில் அடைத்தனர்.