கே.டி. ராகவன் விவகாரத்தால் ஆபாச வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர், பாஜகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், “கே.டி. ராகவன் பாலியல் வீடியோவை போடச் சொன்னதே அண்ணாமலை தான்” என்று, மதன் வெளிப்படையாகவே பேசி உள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் கே.டி. ராகவன் ஆபாச வீடியோ விவகாரம் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது.

அதாவது தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் எல்.முருகன், பாஜக தமிழ் மாநில தலைவராக இருந்தபோதே, “தமிழக பாஜக தலைவர்களும், அதன் நிர்வாகிகளும் அந்த கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகளுடன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ரூம் போட்டு கூத்தடிப்பதாக” பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், தற்போது ராகவன் வெளியிட்ட வீடியோ விவகாரத்தில் உண்மை என்று, வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 

அதாவது, பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், பெண் நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவது போன்றும், அப்படி பேசிக்கொண்டே சுய இன்பம் மேற்கொள்வது போலவும்” அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம், தமிழக பாஜகவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அத்துடன், “கே.டி. ராகவன், மட்டுமல்லாமல் இன்னும் 15 தமிழக பாஜக நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட சுமார் 60 வீடியோக்கள் என்னிடம் இருப்பதாகவும்” மதன் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

மிக முக்கியமாக, “பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இந்த வீடியோவை காட்டியதாகவும், அவர் தான் இதனை இணையத்தில் லீக் செய்ய சொன்னதாகவும்” மதன் வெளிப்படையாகவே தற்போது கூறியுள்ளார். 

“அண்ணாமலை நேர்மையானவர் என்பதால், ராகவன் வீடியோவை வெளியிட சொன்னார் என மதன் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ஆபாச வீடியோ வெளியாகி ராகவன் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடவும், அண்ணாமலை தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லாதது போல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்” என்றும், மதன் குறிப்பிட்டு உள்ளார்.

வீடியோ தொடர்பாக மதன் பேசியது உண்மை தான் எனவும், ஆனால் தான் வெளியிட சொல்லவே இல்லை என்ற சூடத்தில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பின் மதன் ரவிச்சந்திரன் அவர் தோழி வெண்பா கீதைய்யன் ஆகிய இருவருமே கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். மதனுடைய Madan Diary என்ற யூடியூப் சானலும் முடக்கப்பட்டது. மதன் பொய் பேசியது போலவும், தான் நேர்மையானவர் என்பது போலவும் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலையின் உண்மை முகத்தை மதன் ரவிச்சந்திரன் தற்போது தோலுரித்துள்ளார்.

இதன் மூலம், பாஜகவிற்குள் நடந்த அதிகாரப் போட்டியின் காரணமாக, இந்த பிரச்சனை தற்போது வெளி உலகில் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.