தமிழ் திரை உலகின் மிக குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக சிறந்த படங்களை வழங்கி வரும் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த அருவி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்த அருவி திரைப்படம் மிகச் சிறந்த திரைப்படமாக அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2021) வெளிவந்த திரைப்படம் வாழ். நடிகர்கள் பிரதீப் அந்தோனி & T.J.பானு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த வாழ் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது.

அடுத்ததாக மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கவுள்ளார் என தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

நேற்று (ஜனவரி 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை) இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் - டீனா திருமணம் நடைபெற்றுள்ளதாக சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியாகியுள்ளது. எனவே இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு சினிமா ரசிகர்களும் திரை பிரபலங்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
aruvi director arun prabhu purushothaman gets married to teena