தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் & ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். முன்னதாக ஹிந்தியில் இயக்குனர் ஆனந்த்.L.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் இணைந்து நடித்துள்ள அட்றங்கி ரே திரைப்படம் நிறைவடைந்து விரைவில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளிவரவுள்ளது.

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் விரைவில் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் தி க்ரே மேன் படத்திலும் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறது.

இதனையடுத்து இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்துவரும் நடிகர் தனுஷ் அடுத்து மீண்டும் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்திருக்கும் திரைப்படம் நானே வருவேன்.

தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு அவர்களின் V கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் நானே வருவேன் படத்திற்கு செல்வராகவன் நடித்த சாணிக் காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி யக்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பூஜையுடன் நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடிகர் தனுஷின் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. சர்ப்ரைஸாக வெளிவந்த நானே வருவேன் புதிய போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.