10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் காதல் ஆசை வார்த்தைகள் கூறி, ஏற்கனவே திருமணமானவர் கடத்திச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

அதே நேரத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான முத்து என்ற இளைஞர், தனது மனைவி மற்றும் தனது 2 வயது குழந்தை உடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

மேலும், ஏற்கனவே திருமணமான 24 வயதான முத்து, கோவையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். தற்போது, விடுமுறைக்காக ஊரிக்கு வந்து விட்டு, மீண்டும் அவர் கோவை செல்ல ஆயத்தமாக உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், தனது சொந்த ஊரைச் சேர்ந்த குறிப்பிட்ட அந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதல் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, அவரது வீட்டிற்குத் தெரியாமல், தான் வேலை செய்யும் கோவைக்கே அழைத்துச் சென்று உள்ளார்.

அதே நேரத்தில், எப்போதும் வீட்டில் இருக்கும் மாணவி தற்போது வெகு நேரமாகியும் காணவில்லை என்று, சிறுமியின் தாயாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, தனது மகளை அவரது தாயார் தேடிப் பார்த்து உள்ளார். ஆனால், எங்குத் தேடியும் மகள் கிடைக்காத நிலையில், பயந்துபோன அந்த தாயார், “தனது மகளை காணவில்லை” என்று, அங்குள்ள தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து தொப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மாயமான மாணவி கோவையில் ஏற்கனவே திருமணமான முத்து உடன் தங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த மாணவியை பத்திரமாக மீட்டனர். அத்துடன், மாணவியுடன் அங்கு தங்கியிருந்த ஏற்கனவே திருமணமான முத்துவை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். 

அதன் தொடர்ச்சியாக, அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அதனை வாக்குமூலமாகப் பெற்று, முத்துவை சிறையில் அடைத்தனர்.

அத்துடன், மீட்கப்பட்ட மாணவியை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த சிறுமியை போலீசார், அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.