தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது, மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அதாவது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு மத்திய அரசால் ஆண்டு தோறும் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த விருதுடன் பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், தாமிர பட்டயமும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதுவும், இந்தியாவில் உள்ள இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான படைப்புக்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் தான், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பிரபல தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதன் படி, மேற்கு வங்க கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் “கோரா” நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே.செல்லப்பனுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “திருக்குறளை இந்தி மொழி” பெயர்த்த டி.இ.எஸ் ராகவனுக்கு சாகித்ய அகாடமி விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “செல்லாத பணம்” நாவலுக்காக தமிழின் பிரபல எழுத்தாளர் இமையத்திற்கு கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தற்போது வழங்கப்பட்டது.  

அதே போல், கவிஞர் சல்மாவின் “இரண்டாது ஜாமங்களின் கதையை” மராட்டியத்தில் மொழி பெயர்த்ததற்காக “சோனாலி நாவாங்குளுகுக்கும்” விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த விருதினை, பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி தலைவருமான விஸ்வநாத் பிரசாத் திவாரி வழங்கினார். 

அதன் படி, தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், செப்பு பதக்கமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, “சாகித்ய அகாடமி விருது தனக்குத் தாமதமாக வழங்கப்பட்டாலும், அதில் மகிழ்ச்சிதான்” என்று, எழுத்தாளர் இமையம் கூறியுள்ளார்.

தான் சாகித்ய அகாதமி விருது பெற்றது குறித்து பேசிய எழுத்தாளர் இமையம், “தாமதமாக தமக்கு விருது வழங்கப்பட்டாலும், அதில் மகிழ்ச்சிதான் என்றும், 6 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள், ஒரு நெடுங்கதை ஆகியவற்றை எழுதியிருப்பதாகவும், தமது படைப்புகள் வாயிலாகத் தமிழ்ச் சமூகத்தின் முகங்களைக் காட்ட முயற்சி செய்திருப்பதாகவும்” தெரிவித்து உள்ளார்.