60 வயது பெண்ணை கொலை செய்து விட்டு, அவரது சடலத்துடன் பாலியல் உறவு கொண்ட 19 வயது சைக்கோ இளைஞனால் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிலிபங்கா காவல் நிலைய எல்லைப் பகுதியில், 60 வயது கொண்ட பெண் ஒருவர், கணவனை இழந்த நிலையில், தனியாக வசித்து வந்தார்.

அப்போது,  கடந்த 16 ஆம் தேதி வியாழக் கிழமை இரவு, அந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதான சுரேந்தர் எனும் மாண்டியா என்ற இளைஞர், அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து உள்ளார்.

அப்போது, அந்த பெண் அங்கு தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அந்த பெண்ணை அந்த 19 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த இளைஞனிடம் போராடி உள்ளார். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண்ணை, அந்த 19 வயது இளைஞன் அடித்து கொலை செய்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த பெண் உயிரிழந்த நிலையில், சடலமாகக் கிடந்த அந்தப் பெண்ணின் சடலத்துடன் அந்த இளைஞன் பாலியல் உறவு கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் உறவினரிடமும் அவர் கூறியிருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக அங்குள்ள பிலிபங்கா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார். அந்த இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுரேந்தர் மீது கொலை, நெக்ரோபிலியா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில்,
“இறந்தவர்களின் உடல்களுடன் உடலுறவு கொள்வதற்கு நெக்ரோபிலியா என்று பெயர் உள்ளது என்றும், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அந்த சைக்கோ இளைஞர்களும் சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னரே கொலை செய்யப்பட்ட பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அவருடைய செல்போனை பறித்துச் செல்வதும் வழக்கம்” என்றும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.