கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வந்தனர்.இந்த தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரேயா அஞ்சன்.

இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.கொரோனாவை அடுத்து விறுவிறுப்பாக சென்று வந்த திருமணம் தொடர் நிறைவு பெற்றது.

இந்த தொடரின் மூலம் சித்து மற்றும் ஸ்ரேயா இடையே காதல் மலர்ந்தது விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.ஸ்ரேயா அஞ்சன் விஜய் டிவியின் அன்புடன் குஷி தொடரில் தொடரின் ஹீரோயினாக நடித்து வந்தார் இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த சீரியலில் நடிப்பதற்கு முன் கன்னட மொழியில் சில படஙக்ளில் நடித்திருந்தார் ஸ்ரேயா அஞ்சன்.தற்போது தமிழில் இவர் நடித்துள்ள ஐந்து உணர்வுகள் என்ற படத்தின் போஸ்டர் ஒன்று செம வைரலாகி வருகிறது.இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இந்த படத்திற்காக பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

shreya anchan aindhu unarvugal movie to release soon poster goes viral