சமூக வலைதளங்களில் இன்று தாடி பாலாஜி தான் ஹாட் டாபிக். தாடி பாலாஜியின் அரசியல் பிரவேசம் செய்ய போகிறார். அவர் கட்சி தொடங்க போகிறார். தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருக்கப் போகிறார் என்று வலைதளங்களில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.


தாடி பாலாஜியின் புகைப்படத்துடன் அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் கட்சியின் பெயர், கட்சி ஆரம்பிக்க போகும் தேதி, நேரம் உள்ளிட்ட பல விபரங்கள் இருக்கிறது. 


தாடி பாலாஜியின் புதிய கட்சியின் பெயர் ஆ என்று போட்டு பக்கத்தில் ரம்பம் புகைப்படம் போட்டு இருக்கிறது. இதனால் கட்சியின் பெயர் ஆரம்பம் என்று தெரிக்கிறது. அவர் அரசியலுக்கு வரும் நேரம் என்ற இடத்தில் அரசியலுக்கு கெட்ட நேரம் எனவும் 2023 -ம் ஆண்டு வருகிறார் எனவும் போடப்பட்டுள்ளது . கட்சி தொடங்கப்பட இருக்கும் இடம் எங்கு என்றால் மண்டம் புக்கிங் இல்லாத நாட்களில் என்றும், உறுப்பினர் சேர்க்கைக்கு தொடர்பு எண் என்று அலைப்பேசி எண்ணுக்கு பதிலாக  NOT REACHABLE  என்று எழுதியுள்ளனர். 


இந்த போஸ்டரில் இருக்கும் முக்கிய அம்சமே கடைசி வரி தான். அந்த வரி, ‘’ உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் ” என்று எழுதி அசத்தியிருக்கிறார். 
காமெடியாக எட்டி செய்யப்பட்ட இந்த போஸ்டரை , தாடி பாலாஜிக்காக யார் எட்டி செய்தார்கள்? அல்லது டைம்லைனில் வருவதற்காக தாடி பாலாஜியே செய்து பரவ செய்தாரா? அல்லது யாரையாவது சூசகமாக கலாய்கிறாரா? என வலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள்.