திரையுலகில் என்றும் டாக் ஆஃப் தி டவுனில் இருப்பவர் நடிகர் சிலம்பரசன். புதுச்சேரியில் நடைபெற்று வரும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார் சிலம்பரசன். ஒரு மாத காலத்திற்குள் நடித்து முடித்ததுடன், டப்பிங்கும் பேசிக் கொடுத்துவிட்டார். முறையான பாதுகாப்புடன் புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது மாநாடு படக்குழு. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் சிலம்பரசன். 

ரசிகர்களுக்காக மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவானார் சிம்பு. முதல் வீடியோவாக தனது உடல் ஃபிட்னஸ் வீடியோவை பகிர்ந்து அசத்தினார். இதுவரை தனது சமூக வலைத்தளத்தில் படம் சார்ந்த அப்டேட்டுகளையும், அறிவிப்புகளையும் மட்டுமே பதிவு செய்த சிம்பு, தற்போது தனது மருமகன் ஜேசனுடன் காரில் செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார். சிலம்பரசனின் சகோதரியான இலக்கியாTR-ன் மகன் தான் ஜேசன். 

தனது செல்ல மருமகனுடன் காரில் பயணம் செய்யும் சிம்புவின் இந்த லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜேசனிடம் நீ அங்கே செல்ல வேண்டுமா ? அந்த காருக்கு போக வேண்டுமா என்று கேட்கிறார் சிம்பு. ஜேசனின் ஹேர்ஸ்டைலை பார்த்த ரசிகர்கள், சிறுவயதில் சிலம்பரசனை பார்ப்பது போல் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.