அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிப்பில் இறுதிக்கட்ட ஆய்வில் இருக்கிறது. மேலும் ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  


ஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. மேலும் பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் இணைந்து ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளன.

இதற்கு இங்கிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. 


இந்நிலையில் தமிழகத்தில் விழா காலங்களில் தொற்று அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பது அளிப்பதாக இருக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி தெரிவித்து இருக்கிறார். 
மேலும் , மாநிலத்தின் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில்கூட இந்தியாவிலேயே அதிகப்படியான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.