அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை மிருகத்தனமாக கடித்து, கழுத்தறுத்துக் கொன்ற கொடூர கொலையின் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் என்பவரின் 7 வயது மகள் ஜெயபிரியா, அங்குள்ள அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரின் தயார் மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து வருகிறார். சிறுமி ஜெயபிரியாவின் தந்தை நாகூரான் கூலி தொழிலாளியாக அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார். இதனால், தினமும் அவர் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில், சிறுமி மட்டும் மன நிலை பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வீட்டில் இருப்பது வழக்கம். அப்போது, சிறுமியைச் சரிவரக் கவனித்துக்கொள்ள ஆட்கள் யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, தந்தை நாகூரான் தினமும் வேலைக்குச் சென்ற பிறகு, சிறிது நேரம் வீட்டில் இருக்கும் சிறுமி, அதன் பிறகு சிறிது நேரத்தில் வீட்டிற்கு வெளியே வந்து விளையாடு வழக்கம். அப்படி, வீட்டின் வெளியே விளையாடும் போது, சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ வியாபரி 27 வயதான ராஜேஷ் என்கிற ராஜா, சிறுமிக்குத் தினமும் தின் பண்டங்கள் வாங்கி தந்து பழக்கப்படுத்தி அதன் மூலம் சிறுமியிடம் பழகி வந்திருக்கிறார்.

மேலும், சிறுமியும் விபரம் தெரியாமல் ஆசைப்பட்டுக் கேட்கும் சில தின் பண்டங்களை வாங்கித் தரும்போது, அவன் சிறுமியிடம் வரம்பு மீறி பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. ஆனால், தினமும் அதிகாலையில் வேலைக்குச் சென்று, இரவு வீடு திரும்பும் சிறுமியின் தந்தையால் தட்டி கேட்க முடியவில்லை. வீட்டில் மன நிலை பாதிக்கப்பட்டு இருந்த சிறுமியின் தாயாராலும் அதைத் தட்டி கேட்க முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், இது கொரோனா காலம் என்பதால் பல தரப்பினருக்கும் கடை திறப்பதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், வீட்டில் சும்மா இருந்த ராஜேஷ், தினமும் தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த இளைஞருக்குக் காம வெறி பிடித்துள்ளது. 

காம வெறியில் பொங்கித் தவித்த பூ வியாபாரி ராஜேஷ், சிறுமி வீட்டின் சூழல் நிலை மற்றும் அவர்களின் இயலாமையை தனக்கு சாதமாகப் பயன் படுத்திக்கொண்டு, சம்பவத்தன்று சிறுமிக்குப் பிடித்த தின் பண்டங்களை வாங்கிக்கொண்டு, சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த பகுதியில் உள்ள கிளவிதாம் ஊரணி பகுதியில், ஆள் அரவமில்லாத கருவேல மரங்கள் அடர்ந்த கண்மாய் கரை உள்ள செடி கொடிகள் அடர்ந்த இடத்திற்குச் சென்றதும், சிறுமி ஜெயபிரியாவுக்கு தின் பண்டங்களைக் கொடுத்து, சில ஆசை வார்த்தைகளையும் பேசி உள்ளார்.

அதன் பிறகு, தான் ஆபாசப் படத்தில் பார்த்துத் தொலைத்ததைப் போலவே, வெறி பிடித்த மிருகம் போல், அந்த சிறுமியை உடல் முழுவதும் கடித்துக் கடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், சிறுமி வலியால் அழுது அடம் பிடித்து கூச்சலிடவே, சிறுமியின் தலையில் பலமாகத் தாக்கி உள்ளார். ஆனால், அதில் வலி தாங்க முடியாமல், சிறுமி உயிர் பயத்தில் இன்னும் உறக்க கத்தவே, என்ன செய்வது என்று தெரியாமல் அவன் விழி பிதுங்கி நின்றுள்ளான். அதன் பிறகு தான், அந்த கொடூரத்தை அவன் நிகழ்த்தி உள்ளான்.

“சிறுமியை இப்படியே விட்டால், தன்னை பற்றிய உண்மைகளை வெளியே சொல்லி விடுவார்” என்று பயந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சிறுமியின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்து, கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு, அந்த பகுதியில் உள்ள செடி கொடிகள் அடர்ந்த பகுதியில் உடலை மறைத்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டான்.

அதன் பிறகு, சிறுமியைக் காணவில்லை என்று, அந்த கிராமமே தேடிய போது, கொஞ்சம் கூட ஈவு  இறக்கம் இல்லாமல், சிறுமியின் தந்தை உடன் சேர்ந்து, இவனும் சிறுமியைத் தேடுவது போல், பாவனை காட்டி உள்ளான். அதன் பிறகே, சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விபரம் தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப் படுத்திய நிலையில், ஏற்கனவே சிறுமியிடம் அந்த இளைஞன் பாலியல் ரீதியாக சீண்டி உள்ளதை, அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் அவனிடம் முதலில் லேசாக விசாரித்துள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொல்லி உள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர். 

போலீசாரின் அந்த விசாரணையில், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தான் என்பதையும் கூறி உள்ளான். மேலும், தன்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவார் என்ற பயத்தின் காரணமாகவே, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததையும், அவன் ஒப்புக்கொண்டான். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவன் மீது ஆள் கடத்தல், கொலை வழக்கு, போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நெஞ்சைப் பதற வைக்கும் அறந்தாங்கி 7 வயது சிறுமியின் கொடூர கொலை, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.