கொலம்பியாவில், 13 வயது சிறுமியை 7 ராணுவ வீரர்கள் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உலகம் முழுவதும் சுற்றி அடிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், எந்த நாட்டையும் விட்டு வைக்க வில்லை. எல்லா பக்கமும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே,  வடக்கு கொலம்பியாவில் எம்பெரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்ட பள்ளிக்குச் சென்று விட்டு, அன்று மாலை அவர் வீடு திரும்பி வில்லை. இதனால். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியைப் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், சிறுமியை எங்குத் தேடியும் கிடைக்க வில்லை. 

இதனால், சிறுமி படித்து வந்த பள்ளிக்குச் சென்று பார்த்துள்ளனர். சிறுமி அப்போது அங்கு இருந்துள்ளார். அப்போது, சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, சிறுமியின் பிறப்ப உறுப்பு பகுதியில் அதிக அளவிலான ரத்தம் வெளியேறி உள்ளது. இதனால், பதறிப் போன சிறுமியின் பெற்றோர் சிறுமியைத் தூக்கி நிற்க வைத்துள்ளனர். ஆனால், சிறுமியால் நிற்கவோ, நடக்கவோ கூட முடியவில்லை. இதனால், பெரிய விபரீதம் ஏதோ நடந்துள்ளதை உணர்ந்த சிறுமியின் பெற்றோர், அழுது துடித்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, சிறுமிக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை 7 ராணுவ வீரர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவ செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்கள் விரைந்து வந்து நடத்திய விசாரணையில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் 7 பேர் சேர்ந்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 

மேலும், அந்த ராணுவ வீரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை அந்த 7 பேரும் ஒப்புக்கொண்டனர். 

இதனால், கொலம்பியா நாட்டின் சட்ட படி, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ராணுவ வீரர்களே, இப்படி சிறுமி என்றும் பார்க்காமல், சிறுமியைக் கூட்டுப் பலாத்காரம் செய்த 

சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ், பொது மக்களைத் தீவிரமாகத் தாக்கி வரும் நிலையில், இன்னொரு பக்கம் அதிகாரம் படைத்தவர்கள், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இது போன்ற மனித மீறிய செயல்களில் ஈடுபடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சிறுமியைக் கூட்டுப் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று, அந்நாட்டில் சிறுமிக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இதனால், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு, அந்நாட்டு அரசுக்குப் பெரிய தலை வலியாக மாறும் என்று கூறப்படுகிறது. 

இந்த பிரச்சனையை எப்படி கை ஆள்வது என்று அந்நாட்டு அரசும், ராணுவ உயர் அதிகாரிகளும் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மன இறுக்கத்தில் உள்ள காவல் துறையினர் 80 பேருக்கு, தனியாக மன ஆற்றுமை பயிற்சி அளிப்பது போல், கொலம்பியா நாட்டில் மன இறுக்கம் மற்றும் தனிமையில் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு மன ஆற்றுமை பயிற்சி அளிக்க வேண்டுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.