இளம் பெண்ணை காதலிப்பதாகக் கூறி தனது காரில் அழைத்துச் சென்று காதலன், அவரக்கு குளிர் பானத்தில் மது கலந்துகொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு அங்குள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

அந்தக் கடைக்கு வாடிக்கையாளராக அடிக்கடி வந்து சென்ற அங்குள்ள வணிகர் வீதியைச் சேர்ந்த தொழிலதிபர் குணசீலன் என்பவர், அந்தப் பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாகப் பேசி பழகியிருக்கிறார்.

அதன் பிறகு அந்த பெண்ணை காதலிப்பதாகக் கூறி, அவருக்கு ஆசை வலை விரித்திருக்கிறார். இதனை நம்பி, அந்த பெண்ணும், அவருடன் பேசி பழகி வந்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், காதலன் குணசீலன் அந்த இளம் பெண்ணிடம் பொய்யாக நடித்துப் பேசி வந்த நிலையில், “எங்களுடைய பூர்விக சொத்துகள் இருக்கும் மேல்கதீர்பூர் கிராமத்துக்கு வா சென்று வரலாம்” என்று, அந்த இளம் பெண்ணை அழைத்திருக்கிறார்.

அந்த இளம் பெண்ணும், காதலன் தான் அழைக்கிறார் என்ற நம்பிக்கையில் அவரை, அவருடைய காரில் ஏறிச் சென்றிருக்கிறார்.

அப்போது, காரில் செல்லும் வழியிலேயே அந்த இளம் பெண்ணுக்கு குளிர் பானத்தில் மதுபானத்தை கலந்து குடிக்க வைத்திருக்கிறார். அதனை குடித்த அந்தப் பெண்ணுக்கு, சற்று நேரத்திலேயே போதை ஏறி உள்ளது.

இதனையடுத்து, தன்னுடைய நண்பர்களான, மேட்டு காலனி சிறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான வழக்கறிஞர் ஜெபநேசன், அங்குள்ள ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த 24 வயதான வழக்கறிஞர் குணசேகரன்,  காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் வீதியைச் சேர்ந்த 23 வயதான அஜித், காமராஜ் ஆகியோரை மேல்கதிர்பூரிலுள்ள தன்னுடைய பம்பு செட்டுக்கு வருமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த பம்பு செட்டுக்கு அந்த பெண்ணை கடும் போதையில் அழைத்து வந்த அந்த காதலன், அங்கு ஏற்கனவே வந்து பதுங்கியிருந்த தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, தனது காதலியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

அப்போது, அந்த பெண் போதையில் இருந்தாலும், அந்த 5 பேரின் பாலியல் வெறியாட்டத்தால், அந்த வலிகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த பெண் சத்தம் போட்டு அலறி துடித்து உள்ளார். இளம் பெண்ணின் கறல் சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இதனையடுத்து, அந்த 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர்.

அத்துடன், இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், அந்த இளம் பெண்ணை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனயில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் ஜெபநேசன் , குணசேகரன், அஜித், மற்றும் தொழிலதிபர் குணசீலன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள காமராஜர் என்பவரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.