16 வயதுடைய 11 ஆம் வகுப்பு மாணவியை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்து, இரு இளைஞர்கள் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் குற்றங்களுக்குப் பெயர் போன உத்திரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த சம்பவமும் அரங்கேறி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான விவசாயி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு, 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பில் படித்து வருகிறார். 

இந்த சூழலில் தான், 11 ஆம் வகுப்பு படிக்கும் அந்த 16 வயதான சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் நண்பர்களாக அறிமுகம் ஆகி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த 16 வயதான சிறுமியும், அவர்கள் இருவரையும் நம்பி, நட்புடன் பழகி வந்து உள்ளார்.

இதனால், அவர்கள் இருவரிடமும் தனது செல்போன் எண்ணைப் பகிர்ந்துகொண்ட அந்த சிறுமி, அந்த இரு இளைஞர்களுடனும் வாட்ஸ்ஆப் மூலமாகப் பேசி பழகி வந்து உள்ளார். 

இந்த நிலையில், அந்த இரு இளைஞர்களும் அந்த சிறுமியை “முக்கியமான விசயம் பேச வேண்டும்” என்று, தனியாக வரவழைத்து உள்ளனர்.

அதனை நம்பி, அந்த சிறுமியும் தனியாகச் சென்று உள்ளார். அப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்ற அந்த இரு இளைஞர்களும், அந்த சிறுமியை அங்குள்ள ஒரு இடத்தில் கட்டி வைத்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இப்படியாக, இரவு முழுவதும் அந்த சிறுமியை கடும் சித்ரவதை செய்து, அவர்கள் இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

கொடூரத்தின் உச்சமாக, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததையும், அவர்கள் இருவரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டனர். 

அத்துடன், “இந்த விஷயத்தை வெளியே சொன்னால், உனது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம்” என்றும், அவர்கள் இருவரும் மிரட்டி உள்ளனர்.

இதனால், பயந்து போன அந்த சிறுமி, மறுநாள் வீடு திரும்பியும், இதனைப் பற்றி தனது பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் இருந்து உள்ளார்.

ஆனால், அந்த இரு இளைஞர்களும் அடுத்த சில நாட்களில் இந்த சிறுமியின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ, அந்த பகுதி முழுவதும் பரவிய நிலையில், இது குறித்து சிறுமியின் தந்தைக்கும் விசயம் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, சிறுமியிடம் விசாரித்த போது, அந்த சிறுமி எதுவும் சொல்ல முடியாமல் தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

பின்னர், சிறுமியை காப்பாற்றிய அவரது தாயார், “என்ன நடந்தது?” என்று தனியா அழைத்து விசாரித்து உள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைக் கூறி, அந்த சிறுமி கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசா, சம்மந்தப்பட்ட இரு இளைஞர்களையும் அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.