எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே  ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

படத்தின் ட்ரைலர் கிலிம்ஸ் சில நாட்கள் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹேக்கிங்கை மையமாக கொண்டு படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் முழு ட்ரைலர் வரும் சனிக்கிழமை 27-ம் தேதி வெளியாகவுள்ளதாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் வெளியாகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால். 

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு முழுமையாக முடிந்தவுடன் சக்ரா படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம். அதன் முன் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் வெளிவரலாம் என்று யூகித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.