விஜய் டிவியின் சீரியல் இயக்குனர்களில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் பிரவீன் பென்னட்.கனா காணும் காலங்கள் தொடரில் பணியாற்றிய இவர்,இர்பான்-ரச்சிதா,கவின் உள்ளிட்டோர் இணைந்து நடித்த சரவணன் மீனாட்சி 2 தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து ரியோ-ரச்சிதா இணைந்து நடித்த சரவணன் மீனாட்சி 3 தொடரையும் இவர் இயக்கியிருந்தார்.இந்த தொடரும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து மேலும் ஒரு சூப்பர்ஹிட் தொடரை கையில் எடுத்தார் பிரவீன் பென்னட்.ஆல்யா மானசா-சஞ்சீவ் நடிப்பில் உருவான ராஜா ராணி தொடர் பெரிய வெற்றியை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா,பொம்முக்குட்டி அம்மாவுக்கு,ராஜா ராணி 2 உள்ளிட்ட தொடர்களை இயக்கி வருகிறார் பிரவீன் பென்னட்.இந்த தொடர்கள் TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.இவர் விஜய் டிவியின் பிரபல நடிகையும்,நடன கலைஞருமான சாய் ப்ரமோதிதாவை மனம் முடித்தார்.இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர்.

தற்போது இவர் இயக்கும் புதிய தொடரின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த ஷாபனாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த சீரியலுக்கு நம்ம வீட்டு பொண்ணு என்று பெயரிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இந்த தொடர் குறித்த பிற தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.