தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ. எல். ராகவன். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம். என். ராஜம் ஆவார். 

Veteran Actress MN Rajam Tests Positive For Corona Virus

இரண்டு நாட்களுக்கு முன் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மாரடைப்பு காரணாமாக அனுமதிக்கப்பட்ட  ஏ.எல். ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

Veteran Actress MN Rajam Tests Positive For Corona Virus

தற்போது மறைந்த, ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்று கூறப்புடுகிறது.மேலும் அவருடைய மனைவி நடிகை எம்.என்.ராஜத்துக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Veteran Actress MN Rajam Tests Positive For Corona Virus