கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். ரொமான்டிக் காமெடியான  இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். 

Master Writer Rathna Kumar Recollects Memories Of Watching Theri FDFS

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, நடனம் பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் தங்களது மலரும் நினைவுகளை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து லாக்டவுன் நாட்களை கடத்தி வருகின்றனர். 

Master Writer Rathna Kumar Recollects Memories Of Watching Theri FDFS

இந்நிலையில் தனது மகள்களுடன் விளையாடி நேரத்தை செலவு செய்யும் ரத்னகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தெறி படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது தான் எடுத்த செல்ஃபியை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது ஹார்ட்டிஸ்க்கில் வைத்திருந்ததாக குறிப்பிட்ட ரத்னகுமார், திரையரங்குகளுக்கு சென்ற நாட்களை நினைவு கூர்ந்தார். மாஸ்டர், சூரரைப் போற்று, ஜகமே தந்திரம் போன்ற பெரிய படங்கள் வெளியானால் தான் கோலிவுட்டை புதுப்பிக்க முடியும் என்று கூறியுள்ளார்.