உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Actress Nayanthara Not Affected By Corona Virus rumours cleared

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளளனர்.என்றாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த வண்ணம் இல்லை.குறிப்பாக சென்னையில் பலரும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Actress Nayanthara Not Affected By Corona Virus rumours cleared

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது என்றும் அவர் தண்ணிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இது குறித்து நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது ,இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்றும் நயன்தாரா ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் தெளிவுபடுத்தினர்.

Actress Nayanthara Not Affected By Corona Virus rumours cleared