டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Raghava Lawrence Brother Elwin Debuts As Hero Directed By Raja

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிவருகிறார்.இதனை தொடர்ந்து இவர் சந்திரமுகி 2,மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Raghava Lawrence Brother Elwin Debuts As Hero Directed By Raja

நடிகரும் இயக்குனருமான ராகவா  லாரன்ஸ் தனது  தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்அதில் அவர் கூறியுள்ளதாவது

நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின்  பிறந்தநாள்  ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான  பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது.  அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம்  நாங்கள் பல நாட்கள்  காத்திருந்து  தற்போது தான்  ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன்  இந்த படத்தை  தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற  நடிகர், நடிகைகள்,  தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய  விபரம் விரைவில் அறிவிக்கப்படும்,தற்போது நிலவிவரும் கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அனைவரும் தங்களின்  நல்லாசியையும், ஆதாரவையும்  எனது தம்பிக்கு அளிக்குமாறு  வேண்டுகிறேன்.