ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன். நடிகராக கால்பதித்தவர் இசையமைப்பாளராக ஜொலித்தார். தில்லாலங்கடி, ஈரம், மாஸ்கோவின் காவிரி, காஞ்சனா, ஒஸ்தி, சேட்டை என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தார். தமிழ் அல்லாது பிற மொழி படங்களுக்கும் இசையமைத்த தமன், தெலுங்கில் உச்சத்தை தொட்டார். அலவைகுந்தபுரமுலோ மற்றும் டிஸ்கோ ராஜா படங்களில் பட்டையை கிளப்பினார். 

Thaman Wishes Vijay On His Birthday Hints About Thalapathy 65

தற்போது விஜய் நடிக்கும் தளபதி 65 திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். ஸ்கிரிப்ட் பணிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள முருகதாஸ், ஊரடங்கு முழுமையாக முடிந்த பிறகே படப்பிடிப்பு மற்றும் பிற வேலைகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. 

Thaman Wishes Vijay On His Birthday Hints About Thalapathy 65 Thaman Wishes Vijay On His Birthday Hints About Thalapathy 65

இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா, நம்ம சாங்கிற்காக வெயிட்டிங் என்று பதிவிட்டுள்ளார். தமனின் இந்த பதிவு அதிக லைக்குகளை குவித்து வருகிறது.