இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டால், இந்தியாவே வெல்லும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலின்போது, இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, இந்திய எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார்நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இதனை விமானப் படை தலைமை தளபதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

India china standoff India will win war as per review

அதேபோல், சீனாவும் இந்தியாவுக்கு முன்பாகவே, அங்கு 10 ஆயிரம் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. மேலும் பல போர் வாகனங்களையும் அங்கு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இந்தியா - சீனா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம்; இந்தியா - சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வில், இரு நாடுகளிலும் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கை, விமானங்கள் மூலம் தாக்கும் திறன் போன்றவை விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது. 

அதன்படி, “கடந்த 2017 ஆம் ஆண்டு டோக்லாமில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவும் - சீனாவும் எல்லையில் தங்கள் நாட்டு வீரர்களைக் குவித்து வருகிறது. இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாலும், எல்லையில் பதற்றம் குறையவில்லை. இதனால், சீனா தரும் அச்சுறுத்தல்கள் எல்லாம் இந்தியாவிற்கு நன்மை ஏற்படுத்தும். அதற்கு காரணம், உலக அரங்கில் இந்தியா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்றும், சீன விவகாரத்தில் இந்தியா துணிவதற்குத் தனது நாட்டின் ராணுவ நிலைப்பாட்டில் இந்தியா கொண்டுள்ள மிகுந்த நம்பிக்கையே முக்கிய காரணம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

India china standoff India will win war as per review

குறிப்பாக, “சீன படை பலத்தின் முன், இந்தியா சாதாரணமான என்று ஒரு மாயை உலக அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும். இது முற்றிலும் தவறானது" என்றும் கூறியுள்ளது. 

“ராணுவ கட்டமைப்பு, தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் என்ற ஒட்டு மொத்த கணக்கீட்டில் சீனா முன்னணியில் இருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது என்றும்; ஆனால், இந்த கட்டமைப்புகள் அனைத்தும் பரந்து விரிந்த சீனாவின் எல்லையைப் பாதுகாக்க போதாது” என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், “ இருநாடுகளுக்கும் போர் ஏற்பட்டால், வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை என்றும், களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, “சீனாவுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் திறன் மிகச் சிறப்பாக உள்ளதாகவும், இந்திய - சீனா இடையே போர் ஏற்பட்டால் அதில் தரைப்படை மற்றும் விமானப்படை தான் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்த இரு நாடுகளிலும் கடல் வழி தாக்குதல்கள் சாத்தியமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India china standoff India will win war as per review

“இந்தியாவின் தரைப்படையைப் பொருத்தவரை வீரர்களின் மொத்த எண்ணிக்கையில் இரு நாடுகளும் சம எண்ணிக்கையில் உள்ளதாகவும்; ஆனால், இந்திய - சீன எல்லையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையில் இந்தியாவே முன்னணியில் இருக்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதாவது, “சீனா தனது நாட்டை பாதுகாக்க 5 படைப்பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளது. அதில், இந்திய எல்லை அருகே நிலைகொண்டு இருக்கும் படை மேற்கு திடேட்டர் கமாண்டட்” என்ற படை மட்டுமே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

“இந்த படைப்பிரிவில் இருக்கும் சீன வீரர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே என்றும், இவர்கள் மட்டுமே மலை பாங்கான அந்த 

பகுதிகளில் போரிடும் திறன் பெற்றுள்ளார்கள்” என்று சுட்டிக்காட்டி உள்ள அந்த ஆய்வில், “இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள ராணுவம் அனைத்தும் இந்திய - சீன எல்லையில் தான் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளது. 

India china standoff India will win war as per review

அதாவது, “மொத்தம் 20 லட்சம் இந்திய வீரர்கள் இங்கு குவிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இவர்கள் அனைவரும் இந்திய - சீன எல்லையில் இருக்கும் இடங்களை நன்கறிந்தவர்கள் என்றும், மலைப் பகுதிகளில் போரிடும் திறன் பெற்றவர்கள் என்றும், இதன் காரணமாகத் தரைப்படையில் இந்தியாவே பலம் பொருந்தி திகழ்கிறது” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

“விமானப்படையில் சீனாவின் மேற்கு திடேட்டர் கமாண்ட் பகுதியில் மொத்தம் 157 போர் விமானங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிடம் இந்த பகுதியில் மட்டும் 270 போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பை அழிக்கும் 68 சிறிய ரக விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, விமானப்படையின் எண்ணிக்கையில் இந்த பகுதியில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. அத்துடன், சீனாவின் ஜே10 போர் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் மிராஜ் விமானங்கள் திகழ்கின்றன.

இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளும் முதலில் விமான தளங்களைக் குறி வைத்தே தாக்குதல்களைத் தொடங்கும் என்றும், இதனால் இந்தியா தனது பகுதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து விமான 

நிலையங்களையும் மிக எளிதாகத் தாக்கி அழித்துவிடும் வல்லமை படைத்தது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், “போர் சூழலில் சீனாவின் உட்பகுதியில் உள்ள விமான நிலையங்களிலிருந்து இந்திய பகுதிகளைத் தாக்குவது, சீனாவிற்கு பெரும் பிரச்சினையாக இருக்கும் என்றும், ஒரு வேளை தாக்குதலைத் தொடங்கினால் கூட இந்தியா அதனை எளிதாக முறியடிக்கும் வாய்ப்புகளே தற்போது அதிகம் உள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.  

“ஏவுகணைகளைப் பொருத்தவரை சீனா, இந்தியாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் தாக்க 104 தாக்குதல்களை நடத்த வேண்டும். அதே நேரத்தில், இந்தியாவின் 10 எண்ணிக்கையிலான அக்னி 3 ஏவுகணை மூலம் சீனாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும், இந்தியாவால் மிக எளிதாக தாக்க முடியும்.

India china standoff India will win war as per review

அதேபோல், அக்னி 2 ஏவுகணைகள் மூலம், இந்தியா மத்திய சீன பகுதி முழுவதையும் தாக்கும் திறன் கொண்டது. அதிலும் குறிப்பாக, 51 அணுக்குண்டுகளை வீசும் திறன் கொண்ட ஜாக்குவார் விமானங்கள் மூலம் ஒட்டுமொத்த சீனாவின் திபெத் பகுதியை இந்தியா எளிதாக முற்றிலுமாக அழித்து விடும்” திறன் கொண்டது என்றும் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது. 

“இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால், சீனா தனது நீளமான எல்லையில் உள்ள அனைத்து படைகளையும் ஒன்று திரட்ட வேண்டும் என்றும், ஆனால் இந்தியாவிற்கு அப்படியான நிலை இல்லை என்றும், அதற்குக் காரணம்; ,இந்தியாவின் படைகளில் அதிக சதவீதம் ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தான் எப்போதும் குவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் மிகப்பெரிய பலம். இதன் காரணமாக சீனாவை விட, இந்தியா வலுவான நிலையில் உள்ளது” என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வின் முக்கிய அம்சமாக, “இந்தியா - சீனா இடையே போர் வந்தால், இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 

இதனிடையே, சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு, பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி மத்திய அரசு தற்போது ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே நேரத்தில் கடல், தரை மற்றும் வான்வெளியில் சீனா மீதான கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனிடையே, எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையேயான இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.