தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.பொங்கலை முன்னிட்டு இந்த படம் இன்று மிக பிரம்மாண்டமாக கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் இன்று வெளியானதையொட்டி படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமைத்த பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தளபதி 65 படத்தில் தான் ஒரு பாடலுக்கு நடனமமைக்கை உள்ளதையும் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,நெல்சனுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.