சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

Suriyas Soorarai Pottru Gets U Certificate

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

Suriyas Soorarai Pottru Gets U Certificate

சமீபத்தில் சோஷியல் மீடியா லைவ்வில் தோன்றிய சூர்யா, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகவுள்ளது என்ற ருசிகர அப்டேட்டை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழுமம். இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள். இதனால் இந்த படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.