உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Kamal Hassan Asks People To Join Naame Theervu

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளளனர்.என்றாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த வண்ணம் இல்லை.

Kamal Hassan Asks People To Join Naame Theervu

குறிப்பாக சென்னையில் தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.இதனை கட்டுக்குள் கொண்டுவர நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அரசை குறைசொல்வதால் எதுவும் ஆகப்போவதில்லை நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனை எதிர்கொள்ள வேண்டும் அதற்காக தொடங்கப்பட்டது தான் இந்த நாமே தீர்வு என்னும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.