மதராசபட்டினம், கிரீடம், தாண்டவம், சைவம் போன்ற சீரான படைப்புகளை தந்தவர் இயக்குனர் விஜய். இறுதியாக பிரபுதேவா வைத்து தேவி 2 படத்தை இயக்கினார். தற்போது தலைவி திரைப்படத்தை இயக்கி வருகிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். 

Thalaivi Movie Will Not Have Direct OTT Release

இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். 

Thalaivi Movie Will Not Have Direct OTT Release

இந்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தலைவி படக்குழுவினரை தொடர்பு கொண்ட போது, இச்செய்தி முற்றிலும் தவறானது. இது போன்ற வதந்திகளை திரைப்பிரியர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சமீபத்தில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதால், இந்த திரைப்படமும் அப்படி வெளியாகும் என்று நினைத்து கொண்டனர் நெட்டிசன்கள்.