கொரோனா காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பல நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் வருமானங்களை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா லாபமில்லா அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார்.

Vijay Devarakonda Trust Helps People in Lockdown

இந்த அறக்கட்டளையின் மூலம் 17000 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளதாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விஜய் தேவரகொண்டாவின் இந்த அறக்கட்டளை மூலம் இது வரை ரூ.1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் நிவாரண உதவியாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 8,505 தன்னார்வத் தொண்டர்கள் தங்களை இதில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.

Vijay Devarakonda Trust Helps People in Lockdown

மேலும் 8,505 தன்னார்வத் தொண்டர்கள் தங்களை இதில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.

Vijay Devarakonda Trust Helps People in Lockdown

அறக்கட்டளையில் எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.ஐந்தாம் கட்ட ஓராண்டிங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில் ஜூன் 2ஆம் தேதியுடன் இந்த அறக்கட்டளையின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Devarakonda Trust Helps People in Lockdown

தனது படங்களை போலவே இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் வித்தியாசமான முயற்சியாக  இளைஞர்களை ஒன்றுதிரட்டி தன்னால் முடிந்த உதவியை செய்த விஜய் தேவரகொண்டாவிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Vijay Devarakonda Trust Helps People in Lockdown